தொடர்ந்து 'அந்த' நடிகைக்கு சிபாரிசு செய்துள்ள அஜித்.! காரணம் இதுதான்.?!
ஒரு நடிகையுடன் நடித்து அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகி விட்டது என்றால், சில ஹீரோக்கள் மீண்டும் அந்த நடிகருடன் ஜோடி சேர விருப்பம் தெரிவிப்பர். இருவருக்கும் நன்றாக கெமிஸ்ட்ரி ஒத்துப்போகிறது என்று கூறி மீண்டும் அந்த ஹீரோயினை அடுத்த படத்தில் நடிக்க வைக்க சில ஹீரோக்கள் முயற்சிப்பர்.
ஆனால், தன்னுடன் நடித்த முதல் திரைப்படம் தோல்வியடைந்த போதிலும், அடுத்த படத்தில் மீண்டும் அந்த ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யுங்கள் என்று கூறிய சம்பவம் சினிமா உலகில் நடந்துள்ளது. அவர் வேறு யாருமல்ல அஜித் தான் அப்படி சிபாரிசு செய்துள்ளாராம்.
நடிகர் அஜித் - திரிஷா இணைந்து நடித்த முதல் திரைப்படமான ஜி திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்தடுத்த படங்களில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். ஆனால் அப்பட தோல்விக்கு அவர் காரணமல்ல. அதனால் மீண்டும் அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யுங்கள் என்று திரிஷாவை கிரீடம் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய சிபாரிசு செய்தாராம் அஜித்குமார்.
இதையும் படியுங்களேன் - கைவிரித்த கலைப்புலி....பதறிய சூர்யா....டேக் ஆப் ஆகுமா வாடிவாசல்?!....
அதனை தொடர்ந்து மீண்டும் மங்காத்தா படத்திலும் திரிஷாவை சிபாரிசு செய்துள்ளாராம் அஜித் குமார். இது போதாதென்று மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான என்னை அறிந்தால் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு திரிஷா கச்சிதமாக பொருந்துவார் என திரிஷாவை சிபாரிசு செய்துள்ளார் அஜித்குமார்.
எப்படி இருந்தாலென்ன அஜித்குமார் மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் ஜோடியாக திரையில் வருவதற்கு பொருத்தமாக தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனால் கூட அஜித்குமார் சிபாரிசு செய்திருக்கலாம் என்று சிலர் கூறி வருகின்றனர்.