தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் படத்தில் கமிட்டாகி, கதை விவாதம் எல்லாம் முடிந்து போஸ்டர் ஷூட்டிங் வரை சென்று கூட படத்தின் ஹீரோ மாறிய சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது. அப்படி, மாறும் போது, அது பல ஹீரோக்களுக்கு ஓர் திருப்பு முனையாகவே மாறியிருக்கிறது.
அப்படி தான் நடிகர் அஜித் தொடர்ந்து படஙக்ளை நிராகரிக்க அது தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு கிடைத்து அவர் முன்னணி நடிகராக வலம் வர பெரிதும் உதவியுள்ளது. அந்தளவுக்கு அஜித்திற்கு தெரியாமலேயே சூர்யா அவரால் முன்னணி நடிகராக வளர்த்துள்ளார். ஒரு வேளை அஜித் ஒப்புக்கொண்டிருந்தாலும், சூர்யா வேறு கதைகளை தேர்வு செய்து தன்னுடைய திறமையை வெளிக்கொண்டு வந்திருப்பார் என்பதும் நிதர்சனமான உண்மை.
அஜித் நடிப்பில், பாலா இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் நந்தா. இப்பட கதை ஓகே, போஸ்டர் கூட அஜித் புகைப்படத்தோடு வெளிவந்துவிட்டது. ஆனால், அதிலிருந்து அஜித் வெளியேறிவிட்டார். பின்னர் அது சூர்யாவுக்கு சென்று சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. சூர்யாவின் நடிப்பு திறனை வெளிக்கொண்டு வந்த திரைப்படமாகவும் அமைந்தது.
இதையும் படியுங்களேன் – ஏதேதோ செய்து ஏடாகூடமாய் மாட்டிக்கொண்ட சிவா.! விழிபிதுங்கி நிற்கும் அவலம்.!
அதற்கடுத்து, கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த திரைப்படம் காக்க காக்க, முதலில் போலீஸ் ஸ்டோரி என தலைப்பு வைக்கப்பட்டு படமாக்க இருந்தது. அதன் பிறகு எனோ காரணங்களால் அது நடக்காமல் போய் விட்டது. பின்னர் சூர்யா நடித்து அன்பு செல்வன் ஐபிஎஸ் என மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்துவிட்டது அந்த காதாபாத்திரம்.
அதன் பின்னர் , AR.முருகதாஸ் இயக்கத்தில் மிரட்டல் எனும் பெயரில் அஜித் நடிக்க ஒரு படம் தயாரானது. அதன் பின்னர் அது டிராப் ஆகி, பின்னர், சூர்யா நடிக்க கஜினி-யாக உருவெடுத்தது. அந்த படத்தின் மெகா ஹிட் தான் சூர்யாவை அஜித் – விஜய்க்கு நிகராக உச்சத்தில் தூக்கி நிறுத்தியது என்றே கூறலாம். அந்தளவுக்கு படம் அதிரி புதிரி ஹிட்.
அஜித் தவறவிட்ட திரைப்படங்கள் என பெரிய லிஸ்டே போடலாம். அந்தளவுக்கு தனது கதை தேர்வில் கவனம் சற்று குறைவாக வைத்து, கார் ரேஸிங்கில் கவனத்தை வைத்து ஓடி கொண்டிருந்தார் அஜித் என்றே கூறலாம்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…