Categories: Cinema News latest news

இவர்தான் சார் என்னைய முதன்முதலா அப்படி கூப்பிட்டது- கேமரா மேனிடம் பெருமையாக சொன்ன அஜித்…

“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித், தற்போது “ஏகே 62” திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். முதலில் இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் சிவன், “ஏகே 62” புராஜெக்ட்டில் இருந்து வெளியேறிவிட்டார்.

Magizh Thirumeni

இதனை தொடர்ந்து மகிழ் திருமேனி, இத்திரைப்படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வருகின்றன. எனினும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. எனினும் “ஏகே 62” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குவது ஓரளவு உறுதியாகியுள்ளது.

Also Read

அஜித்தை அவரது ரசிகர்கள் “தல” என்று அழைப்பது வழக்கம். எனினும் சில வருடங்களுக்கு முன்பு தன்னை “தல” என்று அழைக்காதீர்கள் என அஜித் தெரிவித்திருந்தார். எனினும் ரசிகர்கள் இன்றும் அவரை “தல” என்றே அழைத்து வருகின்றனர்.

Dheena

அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த “தீனா” திரைப்படத்தில் இருந்துதான் “தல” என்ற வார்த்தை அஜித்தோடு ஒட்டிக்கொண்டது. அதில் “வத்திக்குச்சி பத்திக்காதுடா” என்ற பாடலில் மகாநதி ஷங்கர், “தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது. நீ ஆடு தல” என்று அஜித்தை பார்த்துக் கூறுவார்.

இதனை தொடர்ந்து கடந்த பொங்கல் தினத்தன்று வெளியான “துணிவு” திரைப்படத்தில் மகாநதி ஷங்கர் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது படப்பிடிப்பில் அஜித்திடம், “21 வருடங்கள் கழித்து நாம் திரும்பவும் பார்த்திருக்கிறோமே சார்” என கூறினாராம். அதற்கு அஜித், “21 வருஷம் ஆகிடுச்சா அதுக்குள்ள” என கூறியிருக்கிறார்.

Mahanadhi Shankar

மேலும் அஜித், “துணிவு” படத்தின் கேமரா மேனை அழைத்து, “இவர்தான் என்னை முதன் முதலில் தல என்று கூப்பிட்டார்” என “தீனா” படத்தில் நடந்தவற்றை ஞாபகம் வைத்து கூறினாராம். இந்த சம்பவத்தை சமீபத்திய விருது வழங்கும் விழா ஒன்றில் பகிர்ந்துகொண்ட மகாநதி ஷங்கர், “அவர் இன்னும் அந்த சம்பவத்தை மறக்கவில்லை” என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இனிமே நடிக்க வருவியா- வடிவேலுவை நெஞ்சிலேயே மிதித்து துரத்திவிட்ட கவுண்டமணி… அப்போ அது நடிப்பு கிடையாதா?

Published by
Arun Prasad