வாவ்.. இது செம ரொமாண்டிக்... அஜித்-ஷாலியின் க்யூட் வைரல் போட்டோ.....
நடிகர் அஜித் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தின் கதாநாயகி ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். அரிதாகத்தான் அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகும். ஏனெனில், அஜித் பொதுநிகழ்ச்சிகளில் அவ்வளவாக கலந்து கொள்வதில்லை.
சமீபகாலமாக அது மாறியிருக்கிறது. ஷாலினி தனது மூத்த மகளுடன் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியது. அதேபோல், அஜித் 62 கெட்டப்பில் அஜித் குடும்பத்தினரோடு ஒரு ரெஸ்ட்டாரண்டுக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி செம வைரலானது.
இந்நிலையில், அதே கெட்டப்பில் அஜித் ஷாலினியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஹாலிவுட் சினிமாக்களில் காட்டுவது போல நட்சத்திர ஹோட்டல் அல்லது ஏதேனும் ஒரு விழாவில் தம்பதிகள் நடனமாடும் நிகழ்ச்சி ஒன்றில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.