Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். பைக் பயணம் , சைக்கிள் பயணம் என எல்லா பயணங்களையும் முடித்து தற்போது விடாமுயற்சியிலும் கொஞ்சம் பயணிக்கலாமே என்று படத்திற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார். படம் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு ஆரம்பித்து முழு மூச்சில் இரண்டு மாதங்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இந்தப் படத்தை முடித்துக் கொண்டு மீண்டும் அஜித் தனது உலக பைக் பயணத்தை தொடங்க இருக்கிறார்.
இதையும் படிங்க: தலைகீழாக தான் குதிப்பேன்!… தீபாவளி ரேஸில் இணைந்த விக்ரம்… இப்போ இந்த விபரீத முயற்சி தேவையா?
இதனால் அஜித் விடாமுயற்சி படத்திற்கு பிறகு சினிமாவிற்கு ஒரு நீண்ட இடைவெளி எடுப்பார் என்று தெரிகிறது. ஒரு பக்கம் தளபதி68 படத்திற்கு பிறகு விஜயும் அரசியல் பயணத்திற்காக தன் கெரியருக்கு பிரேக் எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆக அடுத்தவருடம் விஜய், அஜித் என இருவரும் சில காலம் சினிமா பக்கம் திரும்ப மாட்டார்கள் என தெரிகிறது. இந்த நிலையில் அஜித்தின் கெரியரில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவரோ அதே போல் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினமும் முக்கிய பங்கு வகித்தவர்.
இதையும் படிங்க: நிறுத்து! நிறுத்து!! இந்த தில்லாங்கடி வேலைலாம் வேணாம்… வதந்திக்கு தன் ஸ்டைலில் பதில் சொன்ன த்ரிஷா!
அஜித்தை வைத்து என்னை அறிந்தால், ஆரம்பம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் ரத்னம். ஏ.எம்.ரத்தினத்தின் மகன்தான் 7ஜி ரெயின்போ காலனி பட ஹீரோ ரவி கிருஷ்ணா. ஸ்ரீ சூர்யா மூவிஸ் என்ற பேனரில்தான் படங்களை தயாரித்து வருகின்றனர்.
அஜித்தின் ஆரம்பம் படத்திற்காக மூன்று ஸ்கிரிப்ட்கள் தயார் நிலையில் இருந்ததாம். ஒன்று அப்பாவிற்கு பிடிக்காமல் போனது. இன்னொன்று அஜித் சாருக்கு பிடிக்காமல் போனது. இப்படியே போனால் சரி வராது என நான் ஒரு ஐடியாவை கூறினேன் என்று ரவிகிருஷ்ணா கூறினார்.
இதையும் படிங்க: பிரபல ஹாலிவுட் நடிகரை போல் மாறிய எமி ஜாக்சன்! துரையம்மாவை இப்படியா பாக்கனும்?
அதாவது கொஞ்சம் வித்தியாசமாக உண்மையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஆனால் உண்மையான கதாபாத்திரங்களை படத்தில் காட்டாமல் கதையில் கொஞ்சம் வித்தியாசமான காட்சிகளை வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும் என சொல்லிவிட்டு சென்றாராம்.
படமும் ரிலீஸாகி தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் ஆரம்பம் பட இயக்குனர் ரவிகிருஷ்னனுக்கு போன் செய்து நீங்கள் சொன்ன ஐடியாவில் தான் படம் பண்ணினோம் என்று சொல்லியிருக்கிறார். உடனே ரவி கிருஷ்ணா ‘அடப்பாவிகளா என்கிட்ட சொல்லவே இல்லை’ என்று சொல்லி பாராட்டினாராம்.
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…