
Cinema News
எனக்காக விட்டுக் கொடுத்தார்….! அஜித் பற்றி வலிமை பட நாயகி கூறும் தெரியாத சில விஷயங்கள்…!
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த கடைசி படம் வலிமை. வசூல் ரீதியாக ஓரளவு வெற்றி பெற்றது.ஆனால் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். ஆனால் எப்பவும் போல ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் படம் வெளியானது. படத்தை போனிகபூர் தயாரித்தார்.
அதே போல் இதற்கு முன் வெளியான நேர்கொண்ட பார்வை படமும் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றே கூறலாம். ஆனால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் போனிகபூர் தான் தயாரித்தார். இது ஒரு ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும்.
இதையும் படிங்கள் : முன்னாடி பின்னாடி எல்லாமே டாப்பு!…அசிங்கமா காட்டினாலும் அசர வைக்கும் ஐஸ்வர்யா…
இந்த நிலையில் வலிமை படத்தில் நடித்த துணை நடிகையில் ஒருவரான பெர்லி. அவர் போலீஸ் டிபார்ட்மென்டில் அஜித்திற்கு உதவும் இரண்டு பெண் போலீஸில் ஒருவர். இன்னொருவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் லீடு ரோலில் நடிக்கு நடிகை. இதில் நடிகை பெர்லி கூறுகையில்” அஜித் செட்டில் சூட்டிங் தவிர்த்து மற்ற நேரங்களில் எல்லாரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். எங்களை பற்றியும் எங்கள் வீட்டு உறுப்பினர்களை பற்றியும் விசாரிப்பார்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறும் போது பெண்கள் எல்லாருக்கும் உட்கார நாற்காலி இருக்கும் , ஒரு நாள் எனக்கு இல்லாமல் இருந்தது, அப்போது அஜித் சார் அவர் உட்கார்ந்த நாற்காலியை எனக்கு கொடுத்து அவர் நின்று கொண்டு இருந்தார். அதன் பிறகு அவருக்கு இன்னொரு நாற்காலி வந்தது. எப்பவுமே அஜித் சார் பெண்களை மதிக்கக் கூடியவர், எங்களால் எதாவது சூட்டிங்கில் ரீடேக் ஆனால் its ok, do it again , no problem என்று கூறுவார். ஒருவேளை அவரால் ரீடேக் ஆனால் சாரி கேட்பார் என பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார்.