அஜித் சொன்னத கேட்டிருந்தா அந்த படம் வெளிவந்திருக்கும்!..என் பொழப்பும் ஓடிருக்கும்!..விரக்தியில் பிரபல இயக்குனர்!...
அந்த காலத்தில் ஒரு பிரபல இயக்குனர் நடிகர் ஜெய்சங்கரிடம் கதை சொல்ல ஜெய்சங்கரோ ஒரு நான்கு மாதம் காத்திருங்கள்,அதன் பிறகு இந்த படத்தை பண்ணலாம் எனக் கூற அந்த இயக்குனரோ பொறுமை இழந்து உடனே வேறொரு நடிகரை வைத்து படம் எடுத்திருக்கிறார். ஆனால் அந்த படமோ அட்டர் ப்ளாப்.
இதை அறிந்த நடிகர், தயாரிப்பாளர், மண்வாசனை பட இயக்குனர் சித்ரா லட்சுமணன் அவரிடம் ஏன் சார், பேசாமல் ஜெய்சங்கர் சொன்ன மாதிரி காத்திருந்தால் இந்த படம் அவர் நடிப்பில் நன்றாக ஓடிருக்குமே என்று ஆறுதல் சொன்னாராம். அதே பிரச்சினை தான் சித்ரா லட்சுமணனுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
சித்ரா இயக்கத்தில் கரிசக்காட்டு காதல் என்ற படம் நெப்போலியன், ராஜ்கிரண், ரோஜா, சுவலட்சுமி நடிக்க கிராமத்து வாசனையில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் சித்ரா. அந்த படத்தில் இளம் கதா நாயகன் வேடத்தில் நடிக்க நடிகர் அஜித்தை அணுகியிருக்கிறார். ஆனால் அஜித் நான் நடிக்கிறேன். ஆனால் ஒரு ஆறு மாதம் காத்திருங்கள் என கூறினாராம்.
இந்த சமயம் இவர் காத்திருக்காமல் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் அப்பாஸை கமிட் செய்திருக்கிறார். ஆனால் நான் தப்பு பண்ணிட்டேன், அஜித் கூறியது போல ஆறு மாதம் காத்திருந்தால் என் சினிமா உலகமே வேறு மாதிரி இருந்திருக்கும் என்று கூறி வருத்தப்பட்டார் சித்ரா லட்சுமணன். கரிசக்காட்டு காதல் படத்தின் பூஜைகள் எல்லாம் 1998ஆம் ஆண்டில் கோலாகலமாக போடப்பட்டு சினிமா பிரபலங்களே பார்த்து பிரமிக்கிற அளவுக்கு கட் அவுட் வைத்து நடத்தியிருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு வித காரணத்தால் படம் தொடங்காமலே போய்விட்டதாம்.