அஜித் சொன்ன காது மேட்டர்.. ஏன் எதற்காக.?! குழப்பத்தில் ரசிகர்கள்..!

by Manikandan |   ( Updated:2022-08-20 04:28:38  )
அஜித் சொன்ன காது மேட்டர்.. ஏன் எதற்காக.?! குழப்பத்தில் ரசிகர்கள்..!
X

நடிகர் அஜித் குமார் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இவர், பொதுவாக சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பதில்லை. ஆனால், தனது பிஆர்ஓ-வின் மூலம் அவ்வப்போது தனது உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், இன்று காது சம்பந்தமான ஒரு புகைப்படத்தை பகிர்ந்துகொண்டு, சுரேஷ் சந்திரா "உங்கள் காதுகளைப் பாதுகாக்கவும்" எப்போதும் நிபந்தனையற்ற அன்பு என்று பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த பதிவு வைரலாக தொடங்கியது, மேலும் ரசிகர்களை இந்த கருத்து குழப்பமடைய செய்தது.

ajith1_cine

அதுபோல், ஏன் இந்த கருத்தை அஜித் பதிவிட்டார் என்று பல நெட்டிசன்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது, அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிலளித்துள்ளார். அதாவது, ஒலி மாசுபாடு என்பது சுற்றுச்சூழலில் இயல்பான ஒலியை சீர்குலைக்கும், தேவையற்ற ஒலிகள் என வரையறுக்கப்படுகிறது.

இதையும் படிங்களேன் - ப்ளீஸ்… இப்படி ஒரு தப்பான தகவலை பரப்பாதீங்க… கடுப்பான திரிஷா.!

மேலும் அதில் குறிப்பாக, படத்தொகுப்புகளில் வெடிபொருட்கள், ஒலிவாங்கிகள் மற்றும் சத்தம் எழுப்பும் சாதனங்களின் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் அஜித் விரைவில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் 'ஏகே 62' படத்திற்காக கைகோர்க்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story