ஏன்பா தொடர்ந்து மூணும் ப்ளாப்... இப்படியா சம்பளம் கேட்பீங்க... கோலிவுட் டாப் ஹீரோவை வாரிய கே.ராஜன்...
சினிமாவில் நடிகர்கள் சம்பளம் என்பது அவர்களின் ஹிட் படங்களை வைத்து தான் கணக்கிடப்பட வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் தொடர்ச்சியாக ப்ளாப் கொடுத்திருக்கும் டாப் நடிகர் ஒருவர் 40 கோடி ரூபாய் வரை சம்பளம் ஏற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் சில படங்களை தயாரித்திருப்பவர் கே.விஜயன். அவரின் படங்கள் தராத புகழை இவரின் பேச்சு கொடுத்திருக்கிறது. ஏகத்துக்கும் சில நடிகர்களை ஒருமையில் பேசி பயில்வான் ரங்கநாதனை போல இவரையும் பல சமூக வலைத்தளங்களில் வசை பாடி வருகின்றனர்.
இருந்தும் தனக்கு தெரிந்ததை தொடர்ச்சியாக சொல்லி வருபவர் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதில், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை என தொடர்ச்சியாக மூன்று ப்ளாப் படங்களை கொடுத்தவர் அஜித். ஆனால் அவர் தனது அடுத்த படத்திற்கு 40 கோடி ரூபாய் சம்பளத்தினை உயர்த்தி இருக்கிறாராம்.
அதிலும், 95 முதல் 100 கோடி ரூபாய் என்றால் தான் இயக்குனர்களை கதையை கேட்க உள்ளே அனுமதிக்கிறார் என்றும் தெரிவித்து இருக்கிறார். நீங்க 25 கோடி ரூபாய் வரை குறைத்தால் தான் நல்ல நடிகன் என அவர் சொல்லி இருப்பது தற்போது அஜித் ரசிகர்களுக்கு ஷாக் ஆகி இருக்கிறது.