More
Categories: Cinema History Cinema News latest news

ரசிகர்களிடம் இருந்து நடிகரை காப்பாற்றிய அஜீத்… என்ன ஒரு தெனாவெட்டுன்னு பாருங்க..!

நடிகர் பாவா லட்சுமணன் நடிகர் அஜீத்துடன் நடித்த அனுபவம் குறித்து சில தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

அஜீத் நல்ல மனுஷன். அவரை சமீபத்தில் பார்க்கல. திருப்பதி படம் நடிக்கும்போது பார்த்தேன். அதுக்கு அப்புறம் ஒரு தடவை பார்த்தேன். ‘லட்சுமணா உனக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன். என்ன வேணும்?’னு கேட்டார்.

Advertising
Advertising

இதையும் படிங்க… பெண்களின் மீது ஆண்களின் பார்வை இப்படித் தானே இருக்கு… சென்சாரில் தப்பித்த பாக்கியராஜ் படத்தைப் பாருங்க

சார் இந்த மாதிரி என்னைப் பார்க்கும்போது பேசுனாலே போதும்னு சொன்னேன். அதுக்கு ‘என்னய்யா நீ பாட்டுக்கு… அவன் அவன் என்ன என்னமோ கேட்குறான்’னு சொன்னாரு. இல்ல சார் எனக்கு அப்படி எல்லாம் ஒண்ணும் ஆசை இல்ல சார்னு சொன்னேன்.

‘ஜனா’ங்கற படம் முதல்ல ‘திருடா’ன்னு இருந்தது. அஜீத் சார் வரல வரலன்னு பார்த்தா அவரு பைக்ல வந்துட்டாரு. அப்படி வந்து நடிச்சாரு. அப்போ வந்து பார்டர் தோட்டத்துல 100 பேர் மொட்டை போட்டுட்டு வந்துட்டான். அவங்களை அஜீத் பார்த்தாரு. ‘ஏன்டா மொட்டை போட்டுருக்கீங்க?’.

‘தலைவா நீங்க மொட்டை போட்டீங்கள்ல. அதான் நாங்களும் போட்டுட்டோம்’னு சொன்னாங்க. அப்புறம் எல்லாரு கூடவும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கிட்டாரு. அப்புறம் நான் ஒவ்வொருத்தரையும் விலக்கி விலக்கி விடுறேன். மத்தியானம் லஞ்ச் பிரேக். நான் மேல உட்கார்ந்து சாப்பிடுறேன்.

ஒரு பத்து பேரு என்னை மடக்கிட்டான். டேய் இது யாரு தெரியுமா? ‘தொப்பை என் வாயில குப்பை, அந்த ஆனந்தம் படத்துல பேசினான்ல அவன் தான்டா’ன்னு அப்படியே அடிக்க வந்தான். நான் தட்டைக் கீழே போட்டுட்டு எந்திருச்சி ஓடுனேன். கேரவன் பக்கம் ஓடுனேன். ‘சார் என்னை அடிக்க வர்றாங்க’ன்னு அஜீத் சார்ட்ட சொன்னேன்.

இதையும் படிங்க… தங்கச்சியின் இழப்பு இருந்தாலும் விஜயின் அமைதிக்கு அது காரணம் இல்லையாம்.. டீச்சர் சொன்ன சீக்ரெட்

‘யோவ் நீங்க என்னைப் பார்க்க வந்தீங்க. போட்டோ எடுத்தீங்க. அவரும் ஒரு குக்கீஸ் தான். அவரை ஏன்டா அடிக்க வர்றீங்க. போங்கடா’ன்னு சொன்னாரு. அந்தமாதிரி நடந்தது. சொன்ன உடனே கேட்டுக்குவாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v

Recent Posts