அந்த விஷயத்தை மாற்ற சொன்ன வெங்கட் பிரபு!...கடுப்பான அஜித்!...நடந்தது என்ன தெரியுமா?!...
அஜித்குமார் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு அவரது 50வது திரைப்படமாக வெளியான திரைப்படம் மங்காத்தா. திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றி பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை இந்த திரைப்படம் பெற்றது.
அதற்கு முக்கிய காரணம், அதற்கு முன்னர் அஜித் இந்த மாதிரியான முழுக்க முழுக்க வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை. அப்படி நடித்திருந்தாலும் அதில் ஒரு கதாபாத்திரம் நல்லவனாக இருக்கும். இன்னொரு கதாபாத்திரம் கெட்டவனாக இருக்கும். ஆனால் இதில் ஒரே கதாபாத்திரம் விநாயக் மஹாதேவ். அதுவும் முழுக்க முழுக்க வில்லன்.
அஜித்திடம் இந்த கதையை கூறி வெங்கட்பிரபு ஓகே வாங்கி விட்டார். ஆனால், அதன்பிறகு பலரும் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளனர். அது அஜித்தின் 50வது திரைப்படம் அவரை முழுக்க முழுக்க கெட்டவனாக காட்டினால், ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆதலால் அவரை நல்லவராக காட்ட ஏதேனும் ஒரு காட்சி வையுங்கள். அல்லது பிளாஷ்பேக் காட்சி ஏதாவது வையுங்கள் என கூறியுள்ளனர்.
இதையும் படியுங்களேன் - வாங்க.. லேடிஸ் போட்டோகிராபர்.! பத்திரிகையாளரை விஜயகாந்த் இப்படிலாம் சீண்டுவரா.?! சினி சீக்ரெட்ஸ்...
இதனை அஜித்திடம் வந்து வெங்கட் பிரபு கூறியுள்ளார். அஜித் உடனே கோபப்பட்டு விட்டாராம். முதலில் நீ என்னிடம் கூறிய கதை மட்டும் செய். வில்லனாக நடித்தால் மட்டுமே என்னால் எந்த எல்லைக்கும் சென்று நடிக்க முடியும். இறங்கி நடிக்க முடியும். நான் என்ன அரசியலுக்கா வரப்போகிறேன்? என்னை நல்லவனாக காட்டப் போகிறாய்? நான் நடிகன். எனக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அதிக ஸ்கோப் இருக்கிறது. ஆதலால் அந்த விநாயக் மகாதேவ் கதாபாத்திரம் கெட்டவனாக இருந்து விடட்டும் என்று கூறினாராம்.
அஜித் கொடுத்த நம்பிக்கையின் காரணமாகவே வினாயக் மகாதேவ் கதாபாத்திரம் முழுக்க முழுக்க கெட்டவனாக வடிவமைக்கப்பட்டு, கடைசிவரை பணத்திற்காக கொள்ளையடிக்கும் நபராகவே இருந்ததாம். இதனை வெங்கட் பிரபுவே அண்மையில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார்.