தயாரிப்பாளரிடம் திட்டு வாங்கி கண்கலங்கி நின்ற அஜித்!.. ஆத்திரத்தில் இயக்குனரிடம் என்ன கேட்டார் தெரியுமா?..
இன்று அஜித் எவ்வளவு உயரத்தை அடைந்திருக்கிறார் என்று அவருடன் இருந்து பயணித்தவர்களுக்கு தெரியும். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தன்னுடைய சொந்த உழைப்பாலும் கடின முயற்சியாலும் விடாமல் உழைத்துக் கொண்டு இருக்கும் உன்னத நடிகர் தான் அஜித்.
இவரின் பழைய பேட்டிகளை பார்த்திருந்தால் புரியும்.ஏன் இப்படி யாரிடமும் வெளியே வந்து பழக விரும்பமாட்டார், ரசிகர்களை ஏன் சந்திக்க மாட்டார் என்று. அந்த அளவுக்கு வேதனை அடைந்திருக்கிறார் என்று அவரது பேட்டியில் புரிகிறது. மேலும் ஆரம்பகாலங்களில் ஒரு நடிகராக அந்தஸ்தை பெறுவதற்கு அவர் பட்ட கஷ்டங்களை கூட இருந்தவர்கள் சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் ரேஸில் ஆர்வம் உள்ள அஜித் அதனால் பட்ட காயங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சினிமாவிற்காக தன் உழைப்பை கொடுத்துக் கொண்டு வருகிறார். அவரது நடிப்பில் நல்ல வரவேற்பைபெற்ற படம் ‘ஆனந்த பூங்காற்றே’ திரைப்படம். இந்த படத்தில் அஜித், மீனா, கார்த்திக் உட்பட அனைவரும் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க : உயிர் போகும் நிலையில் இருந்த எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்த நடிகர்… பின்னாளில் வில்லனாக மாறிய சுவாரஸ்ய சம்பவம்…
இந்த படத்தை ராஜ்கபூர் இயக்க காஜா மைதீன் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கான நடிகர்களை தேர்வு செய்த போது அப்பொழுது வளர்ந்து வரும் நடிகராக அஜித் இருந்ததனால் அவரை பார்க்க ஒரு சூட்டிங் ஸ்பாட்டிற்கு ராஜ்கபூரும் காஜாமைதீனும் சென்றிருக்கின்றனர். அப்போது வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த அஜித்,
அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தாராம். மேலும் அஜித்திற்கு தமிழ் படிக்கவும் எழுதவும் தெரியாததால் அவருக்கு தெரியாத தமிழ் வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தாராம் அந்த தயாரிப்பாளர். அதன் பிறகு இடைவேளை சமயத்தில் அஜித்தை பார்க்க இந்த இருவரும் போக வந்த விபரத்தை கேட்டு அறிந்து கொண்ட அஜித்,
காஜா மைதீனிடமும் ராஜ்கபூரிடமும் கதையை கேட்காமல் எனக்கு 22 லட்சம் ருபாய் சம்பளம் கொடுங்கள், நான் நடிக்கிறேன் என்று கூறினாராம். இவர் இதை கேட்டதும் இவர்கள் இருவருக்கும் அஜித்திற்கு அந்த தயாரிப்பாளருக்கும் சம்பளம் விஷயத்தில் தான் பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டனராம்.
அஜித் கேட்ட தொகையை இவர்களும் கொடுக்க சம்மதம் தெரிவிக்க ஆனந்த பூங்காற்றே திரைப்படம் உருவாக ஆரம்பித்தது. மேலும் இந்த படத்தின் பொழுது அஜித்திற்கு ஆக்ஸிடண்டும் ஆனதாம். ஆனாலும் குணமாகி மீண்டும் நடித்துக் கொடுத்தாராம். இந்த தகவலை காஜா மைதீன் தெரிவித்தார்.