ஷாலினியை வெளுத்து வாங்கிய நிருபர்......! டென்ஷனான அஜித் செய்த செயல்....
நட்சத்திரங்களாக இருந்து நட்சத்திர தம்பதிகளாக மாறிய நிறைய நடிகர் நடிகைகளை சினிமா உலகில் பார்க்க முடிகிறது. அந்த காலத்தில் இருந்து இன்று வரை இந்த மாதிரியான நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றது. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மற்ற மொழி சினிமா வாழ்க்கையிலும் இது அரங்கேறியிருக்கிறது.
இதில் சிறந்த நட்சத்திரத் தம்பதிகளுக்கு உதாரணமாக நடிகர் அஜித் மற்றும் ஷாலினியை சொல்லலாம். எங்கு போனாலும் அஜித் அவர்கள் ஷாலினியை பார்த்துக் கொள்ளும் விதம் நிறைய சமூக வலைதளங்களில் நாம் பார்க்க முடியும். ஷாலினியை முன் விட்டு அஜித் ஒரு கேர் பண்ணி தான் கூட்டிக் கொண்டு போவார்.
இந்த மாதிரியான ஒரு கணவர் இருக்க மாட்டார் என ஒரு பத்திரிக்கை நிருபர் அந்தனன் ஒரு பேட்டியில் கூறினார். மேலும் அவர் கூறுகையில் அஜித் ஷாலினி திருமணம் பற்றிய ஒரு பிரஸ் மீட்டில் அஜித் ஷாலினி மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த மீட்டில் ஒரு நிருபர் அஜித்தை விட்டு ஷாலினியிடம் மட்டும் ஏகப்பட்ட கேள்விகளை பதில் சொல்ல விடாமல் திணறடித்துள்ளார். அது என்ன? இது என்ன? என தொடர்ந்து கேள்விகளை கேட்க அஜித் உடனே டென்ஷனாகி இப்ப
உங்களுக்கு என்ன பிரச்சினை? என்னதான் வேணும் என கோபத்துடன் அந்த நிருபரை விளாசியுள்ளார். அதன்பின்னர் தான் அஜித்திடம் கேள்விகள் கேட்டுள்ளனர். இதிலிருந்து அஜித் ஷாலினிக்கு ஒன்னுனா சும்மா இருக்கமாட்டார் என பத்திர்க்கை நிருபர் அந்தனன் கூறினார்.