தேசிய கொடிய மாத்திப் புடிச்ச ரசிகர்.. உடனே வாங்கி ஏகே செய்த செயல்

ajith_race
Ajith: அஜித் தற்போது கார் ரேஸில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். துபாய் மற்றும் ஸ்பெயின் ,போர்ச்சுக்கல் போன்ற நாடுகளில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் தற்போது கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். சமீபத்தில் பெல்ஜியத்தில் கார் ரேஸில் கலந்து கொண்ட அஜித்தின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறது.
அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படம் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியடைந்ததை அடுத்து அஜித் கேரியரிலும் இந்த படம் தான் அதிக வசூலை ஈட்டித் தந்த படமாகவும் அமைந்திருக்கின்றது. ஆரம்பத்தில் இருந்து கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவைகளில் ஆர்வம் கொண்ட அஜித் ரேஸில் எப்படியாவது இந்தியா சார்பாக சாதனை படைக்க வேண்டும் என நினைத்திருந்தார்.
அதற்காக தீவிரமாக பயிற்சிகளும் எடுத்து வந்தார். இடையே அவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக கொஞ்சம் பிரேக் எடுத்தும் கொண்டார் அஜித் .இப்போதுதான் அதற்கான நேரம் வந்திருக்கிறது. விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களுக்கு பிறகு முழுவதுமாக ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். அக்டோபர் மாதம் வரை நடக்கும் இந்த ரேஸில் அஜித்தின் அணி பங்கேற்று பல்வேறு சாதனைகளை படைக்க இருக்கிறது.
இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு தான் அவருடைய அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகும். இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள சென்ற அஜித் இப்போது வரை ரேஸில் பிஸியாக இருக்கிறார். ஏற்கனவே துபாயில் நடந்த கார் ரேசில் அவருடைய அணி மூன்றாம் இடம் பிடித்த நிலையில் பெல்ஜியத்தில் நடந்த கார் ரேசிலும் அவருடைய அணி இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.

எங்கு போனாலும் அஜித்துக்கு என ஃபேன்ஸ் கூடி விடுகிறார்கள். அப்படித்தான் பெல்ஜியத்திலும் அவரைப் பார்க்க ரசிகர்கள் ஏராளமாக குவிந்தனர் .அதில் ஒரு ரசிகர் இந்திய தேசிய கொடியை கையில் ஏந்திய படி அஜித்துடன் புகைப்படம் எடுக்க வந்தார். ஆனால் அந்த ரசிகர் தேசிய கொடியை தலைகீழாகப் பிடித்து வந்தார் .அதை பார்த்ததும் ஷாக் ஆன அஜித் உடனே அதை வாங்கி சரியாக வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் அஜித். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DIvYDv2JX3N/?igsh=bGFwOHRkZTd5eHN1