VenkatPrabhu: தமிழ் சினிமாவின் பிரபல குடும்பத்தில் இருந்து வந்தாலும் தல அஜித் குமாரால் தான் தற்போது கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடித்திருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.
பிரபல இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவரின் தம்பியும் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளரான கங்கை அமரன் குடும்பம் கோலிவுட்டிலேயே பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமை வாய்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர் தான் வெங்கட் பிரபு.
இதையும் படிங்க: என்னையே கேட்ட பிரபல இயக்குனர் அந்த நடிகையுடன் படுக்கையில் ஓவர் டோஸில் இறந்தார்… நடிகை ஷாக்
முதலில் பாடத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து முதலில் நடிகராக அறிமுகமானார். ஆனால் அப்படங்கள் வெங்கட் பிரபுவிற்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து சென்னை 28 படத்தை புதுமுக நடிகர்களை வைத்து இயக்கி முடித்தார். அப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இருந்தும், அவருக்கு மிகப்பெரிய நடிகர்களிடமிருந்து வாய்ப்பு வரவில்லை. தொடர்ந்து தன்னுடைய நெருங்கிய நடிகர்களை வைத்தே கோவா மற்றும் சரோஜா படங்களை ஹிட் ஆக கொடுத்தார். இருந்தும் அவரை நம்பி எந்த நடிகர்களும் முன்வரவில்லை. முதன்முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒப்புக்கொண்டு நடிக்க வந்தவர் அஜித் தான்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் வெங்கட்பிரபு கூறுகையில், நான் முதலில் மூன்று ஹிட் படங்களை கொடுத்தாலும் யாரும் என்னை நம்பவில்லை. சின்ன நடிகர்களை வைத்து இயக்கிவிட்டேன் பெரிய நடிகர்களை இவரால் எப்படி கையாள முடியும் என பயந்தனர். ஆனால் நான் சென்னை 28 முடித்த கையோடு எனக்கு முதல் முறையாக கால் செய்தது அஜித் சார் தான்.
இதையும் படிங்க:நடிகர்களில் தி பெஸ்ட் அஜித்தான்! யார்கிட்டயும் இல்லாத ஒரு குணம்.. பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்
எனக்கும், அவருக்கும் ஜி படத்தில் இருந்தே நட்பு இருந்தது. அவர் சென்னை28 வெளியாவதற்கு முன்னரே எனக்கு இன்னொரு நம்பரில் இருந்து கால் செய்தார். எனக்கும் ஒரு படம் வாய்ப்பு தாருங்கள் என கலாய்த்தார். அப்புறம் தான் அஜித் சார் என தெரிந்தது. சென்னை 28 பார்த்துவிட்டு என்னை இரண்டு தயாரிப்பாளர்களிடம் அனுப்பினார்.
ஆனால் அவர்களுக்கு என்மேல் நம்பிக்கை இல்லை. சென்னை 28 முடிந்த பின்னர் அஜித் சாருடன் தான் நான் பணியாற்றில் இருக்க வேண்டும். அவர் அதற்காக பெரிதும் முயற்சி எடுத்தார் ஆனால் அது நடக்கவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…