Connect with us

எப்பா உன்ன விட்டா எனக்கு யாருமில்ல…! ஆஸ்தான இயக்குனரிடம் மீண்டும் தஞ்சமடைந்த நடிகர் அஜித்…(புதிய அப்டேட்)

ajith_main_cine

Cinema News

எப்பா உன்ன விட்டா எனக்கு யாருமில்ல…! ஆஸ்தான இயக்குனரிடம் மீண்டும் தஞ்சமடைந்த நடிகர் அஜித்…(புதிய அப்டேட்)

நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஏகே-61 என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார். நடிகர் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறு விறுப்பாக போக அஜித்தும் தன் பைக் ரைடை விட்டபாடில்லை.

ajith1_cine

அது ஒரு புறம் போய்க் கொண்டிருக்கிறது. படத்தை பொங்கல் அல்லது தீபாவளி அன்று வெளியிட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இந்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்ற தகவல் அனைவரும் அறிந்ததே. முக்கியமான விஷயம் என்னவென்றால் விக்னேஷ் சிவனை அடுத்து அஜித் தனது ஆஸ்தான இயக்குனரிடம் கூட்டு சேர போகிறாராம்.

ajith2_cine

யார் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். சிறுத்தை சிவா தான். அஜித்திடம் சிவா ஒரு கதையை சொல்ல அஜித்திற்கு பிடித்துப்போக விக்னேஷ் சிவனை அடுத்து அஜித்தை இயக்க போகும் இயக்குனர் சிறுத்தை சிவா என்று தெரிகிறது. இது 5வது முறையாக அஜித் சிறுத்தை சிவா இணையப்போகும் கூட்டணி ஆகும்.

ajith3_cine

ஏற்கெனவே விஸ்வாசம், விவேகம், வேதாளம், வீரம் போன்ற படங்களை கொடுத்த சிவா அடுத்ததாக வைத்திருக்கும் கதையின் தலைப்பு வரம் என்று சொல்லப்படுகிறது. அவர் எடுத்த நான்கு படங்களில் 3 படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. வரப்போகும் படம் எப்படி இருக்கும் என்று பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க போகிறதாம். இது எல்லாம் சரி மீண்டும் இணையப்போகும் இந்த கூட்டணி பற்றி ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வந்ததும் தெரியும்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top