அஜித் வரலைன்னா என்ன?.. நயன்தாரா திருமணத்தில் செம க்யூட்டா கலந்து கொண்ட குட்டி தல!

by Saranya M |
அஜித் வரலைன்னா என்ன?.. நயன்தாரா திருமணத்தில் செம க்யூட்டா கலந்து கொண்ட குட்டி தல!
X

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தில் முதன் முறையாக பிகினி உடையில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே அதிர வைத்திருப்பார் நடிகை நயன்தாரா. அதன் பின்னர் அஜித்துடன் இணைந்து ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ள நிலையில், கண்டிப்பாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் அவர் கலந்து கொள்வார் என நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் ரொம்பவே எதிர்பார்ப்புடன் காத்து இருந்தனர்.

நரிக்குறவ சிறுவன் எல்லாம் நயன்தாரா திருமணத்தை தாண்டி நடிகர் அஜித் வருவார் எப்படியாவது அவரை பார்த்து விட மாட்டோமா என்கிற ஆவலில் வேகாத வெயிலில் கால் கடுக்க காத்து நின்றனர்.

ஆனால், ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஏகே 61 படத்தின் ஷூட்டிங்கை ஒரு நாள் கூட தள்ளிப் போடாமல் தொடர்ந்து படுபிசியாக நடித்து வருகிறார் நடிகர் அஜித் குமார்.

அதன் காரணமாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு நடிகர் அஜித் வரவில்லை.

ஆனால், தனக்கு பதிலாக தனது சார்பாக மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் என அனைவரையும் நயன்தாரா திருமணத்திற்கு அனுப்பி வைத்திருந்தார் நடிகர் அஜித்.

ஷாலினி அஜித்தின் சகோதரியான ஷாமிலி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில், நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட குட்டி தல ஆத்விக் செம சைலன்ட்டாக நீல நிற உடையில் படு க்யூட்டாக கலந்து கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

Next Story