மீண்டும் பைக்கை எடுத்த அஜித்!.. விடாமுயற்சி இப்ப இல்லையா?!.. தீயாக வைரலாகும் செல்பி புகைப்படம்!...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், விஜய்க்கு போட்டியாளராகவும் இருப்பவர் நடிகர் அஜித் குமார். துவக்கத்தில் சாக்லேட் பாயாக பல படங்களில் நடித்து பின்னாளில் மாஸ் ஹீரோவாக மாறியவர் இவர். நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவரின் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அஜித்துக்கு நடிப்பது என்பது தொழில் மட்டுமே. மற்றபடி பைக்கில் வெகு தூரம் பயணம் செய்வது, கார் ரேஸில் கலந்து கொள்வது, ரிமோட்டில் இயங்கும் ஹெலிகாப்டரை இயக்குவது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது என அவருக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. எப்போதெல்லாம் படப்பிடிப்பு இல்லையோ அப்போதெல்லாம் அஜித் இதில் எதையாவது ஒன்றை செய்ய போய்விடுவார்.
கடந்த சில மாதங்களாக பைக்கில் உலக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 2021ம் வருட இறுதியில் தனது பைக்கர் கிளப் நண்பர்களுடன் சேர்ந்து சிக்கிம் வரை 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்தார். அதன்பின் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமாக அவர் பயணம் செய்தார்.
சில மாதங்களுக்கு முன்பு இமயமலை பகுதியில் பைக் ரைடு செய்தார். இமாச்சல பிரதேசம், மணாலி, ரோதாங், அதன்பின் காஷ்மீர் பகுதியில் உள்ள லடாக், லே, ரிஷிகேஷ், கேதர்நாத்,பத்ரிநாத் ஆகிய பகுதிகளிலும் ரைடு செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் அப்போது சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், இப்போது மீண்டும் தனது பைக் ரைடை அவர் துவங்கியுள்ளார். இந்த முறை வெளிநாட்டில் பைக் ரைடு செய்து வருகிறார். ஜெர்மனி, டென்மார்க், நார்வே அவரின் பயண திட்டம் நீள்கிறது. இது தொடர்பான ஒரு புகைப்படத்தோடு, அஜித்தின் செல்பி புகைப்படத்தையும் ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக துவங்காமல் இருக்கிறது. இது தொடர்பான அப்டேட் எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். கடைசியாக வந்த தகவலின் படி செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்பட்டது. எனவே, ஒரு மாதம் அஜித் பைக் ரைட் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.