உதயநிதியிடம் ‘துணிவு’ பற்றி அஜித் இதுவரை பேசாத காரணம்!.. தில்லாக நிற்கும் நம்ம தல!..
போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சு வாரியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாகவும் கேஜிஎஃப் புகழ் ஜான் கொக்கேன், அமீர் மற்றும் பாவ்னி போன்ற முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். வெளியான மூன்று பாடல்களில் இரண்டு பாடல்கள் செம ஹிட். மேலும் சமீபத்தில் வெளியான டிரெய்லரும் நல்ல அளவில் ரீச் ஆகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் தமிழ் நாட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.
ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் உரிமையாளரான உதயநிதி சமீபத்தில் அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ரெட் ஜெயண்ட் நிறுவன பொறுப்பை கிருத்திகா உதய நிதி ஏற்பார் என செய்திகள் வந்தன. இந்த நிலையில் வாரிசு துணிவு படத்தின் போட்டா போட்டி எந்த அளவுக்கு ஒரு தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது என்று பலபேருக்கு தெரியும்.
இதையும் படிங்க : யாரையும் நோகடிக்காத எம்ஜிஆர்.. தன்னை கேள்வி கேட்ட பானுமதியிடம் எப்படி நடந்து கொண்டார் தெரியுமா?..
இதன் ஆரம்பமே இந்த இரண்டு படங்களின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை யார் கைப்பற்ற போகிறார்கள் என்பதில் இருந்துதான். துணிவு படத்தை உதயநிதி கைப்பற்றிய பிறகு ஒரு மரியாதைக்கு கூட அஜித் இதுவரை உதயநிதிக்கு தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்து சொல்லவில்லை.
இதுவே வாரிசு படத்தை கைப்பற்றியிருந்தால் விஜய் உடனே போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வேறு எதாவது உதவிகள் வேண்டுமா என்றும் கேட்டிருப்பார் என்று இந்த செய்தியை தெரிவித்த வலைப்பேச்சு அந்தனன் கூறினார். மேலும் அவர் கூறும்போது அஜித் இப்படி இருக்கிறதை பார்த்தால் உலகத்திலேயே தன்னுடைய படத்தை தள்ளி நிற்கும் ஆள் அது நடிகர் அஜித் தான் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் உதயதிதியை சந்தித்து வாழ்த்துக்களை சொன்னால் எங்கே கலைஞர் டிவிக்கு ஒரு பேட்டி ஒன்று கொடுத்துவிடுங்கள் என்று அஜித்திடம் கேட்டு விடுவாரோ? அதுக்கு மீறி கேட்டால் அதை மீறவும் முடியாது, மீறினால் படத்திற்கு எதாவது பிரச்சினை ஏற்பட்டுவிடும் என முன்கூட்டியே கருதி அதற்கு பேசமாலேயே இருந்து விடலாம் என எண்ணியிருப்பாரோ என்று பயந்து கூட அஜித் சந்திக்காமல் இருக்கலாம் என்றும் வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.