ஹெலிகாப்டரில் வந்த நிவாரணம்! 2 கோடி கொடுத்தாரா அஜித்? யாருக்கும் தெரியாத செய்தி

ajith
Actor Ajith: எந்தவொரு பப்ளிசிட்டியும் பிடிக்காதவராக இருப்பவர் நடிகர் அஜித். ஏகப்பட்ட உதவிகளை செய்து வந்தாலும் அதை பற்றி வெளியில் பேசவேண்டாம் என தனது மேலாளருக்கு சொல்லிவிடுவாராம். அதுவும் குறிப்பாக அசல் படத்திற்கு பிறகு ஏராளமான உதவிகளை செய்து கொண்டு வருகிறாராம்.
சமீபத்தில் ஏற்பட்ட புயல் காரணமாக பாதிக்கபட்ட மக்களுக்கு ஹெலிகாப்டரில் நிவாரணம் மற்றும் 2 கோடி நிதி கொடுத்ததாகவும் ஒரு செய்தி வைரலாகின்றது. ஆனால் அது அத்தனையும் உருட்டு என பிரபல பத்திரிக்கையாளர் கூறினார்.
இதையும் படிங்க: தேவையில்லாம மூக்கை நுழைத்த பாக்கியராஜ்… சரிபட்டு வராதுனு முடிவையே மாத்திய சசிகுமார்…
யாருக்கும் தெரியாமல் உதவிகளை செய்யக் கூடியவர்தான் அஜித் என்றாலும் ஹெலிகாப்டரில் வந்து நிவாரணம் கொடுக்கிறார் என்றால் அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் மீடியாவுக்கு தெரியாமல் எப்படி இது சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்பினார்.
ஆனால் புயல் நேரத்தில் அஜித் செய்த செயல் ஒன்று. நடிகர் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியதுதான். ஆனால் அதுவும் புகைப்படமாக விளம்பரத்திற்காக இணையத்தில் வைரலானது. இந்த நேரத்தில் அஜித், அமீர்கான் சம்பந்தப்பட்ட அந்த புகைப்படம் வெளிவந்திருக்க கூடாது.
இதையும் படிங்க : அல்லக்கைகள் செய்த அட்டூழியங்கள்! மக்களின் கோபத்தை சம்பாதித்த விஜய், நயன்தாரா
அஜித்தை மீறித்தான் வெளிவந்திருக்கும் என அந்த பத்திரிக்கையாளர் கூறினார். கஜா புயல் நேரத்தில் கூட 15 லட்சம் கொடுத்ததாக முதல்வர் அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அதை விட இந்த புயலில் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம். ஆனால் இதுவரைக்கும் அஜித் எதுவும் செய்தாரா? என்பதை பற்றி ஒரு செய்தியும் வரவில்லை. ஆனால் நிவாரணம், 2 கோடி என்பதெல்லாம் சுத்தப் பொய் என அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.