Connect with us
banner

ரசிகர்களுக்காக, போனிகபூரிடம் அஜித் போட்ட கண்டிஷன்… வலிமையான அப்டேட் இது!

Cinema News

ரசிகர்களுக்காக, போனிகபூரிடம் அஜித் போட்ட கண்டிஷன்… வலிமையான அப்டேட் இது!

ரசிகர்களின் முன்று வருட காத்திருப்புக்கு விருந்தளிக்க தயாராகவுள்ளது வலிமை திரைப்படம். கொரோனா பரவல் காரணமாக பல திரைப்படங்கள் தள்ளிப்போக, முன்பே அறிவித்ததை போல் ஜனவரி 13ஆம் தேதி மும்மொழிகளில் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் உறுதியாக கூறியுள்ளார்.

இந்நிலையில், வலிமை படத்தை பிரபல ஒடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 300 கோடி கொடுத்து திரைப்படத்தை வாங்க கேட்டதாகவும், ஆனால் போனிகபூர் முதலில் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் அதன்பிறகு தான் OTTயில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், தனது ரசிகர்கள் 3 வருடமாக வலிமை படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் எனவும் அதனால் திரைப்படம் நிச்சயமாக தியேட்டரில் தான் வெளியாக வேண்டும் என்றும் அஜீத, போனிகபூருடன் கூறியுள்ளாராம். அதுமட்டுமின்றி, அஜித் தன் ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை எனவும் போனி கபூர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top