Categories: Cinema History Cinema News latest news

நான் விஜயை தூக்கிப்போட்டு மேலே போவேன்… விஜய் நண்பரிடமே கெத்து காட்டிய அஜித்… தளபதி ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமலுக்கு அதிகப்படியாக ரசிகர்களை கொண்டவர்கள் தல அஜித்தும், தளபதி விஜயும் தான். ரஜினி மற்றும் கமலுக்கு இடையே பனிப்போர் நடந்தது எல்லாம் இல்லை. ஆனால் இவர்களுக்கோ ஒவ்வொரு படத்திலும் முட்டிக்கொண்டும், மோதிக்கொண்டு தான் இருந்தனர். சில வருடங்களாக தான் இதை படத்தில் குறைத்து இருக்கிறார்கள்.

இருவரும் நண்பர்கள் எனக் கூறி கொண்டாலும், ஒருவரை தாக்கி படங்களில் பஞ்ச் டயலாக்கெல்லாம் இடம் பெற்ற காலமும் இருக்கிறது. பெரிய இயக்குனரின் மகன் என சினிமாவிற்குள் ஈசியாக நுழைந்து விட்டார் விஜய். அப்பா எஸ்.ஏ.சி தொடர்ந்து படம் இயக்கினால் கூட தொடர்ச்சியாக தோல்வியை தான் தழுவியது. இருந்தும் விடாப்படியாக நின்று தன்னை மெருக்கேற்றிக்கொண்டு இன்று தமிழ் சினிமாவின் தளபதியாக மாறி இருக்கிறார் விஜய்.

விஜய் – அஜித்

இதில் அஜித் கதையோ வேறு ஒவ்வொரு படிக்கட்டையும் தனி ஆளாகவே தாண்டினார். தொடர்ச்சியாக விபத்து ஒரு பக்கம் என பல போராட்டங்களுக்கு இடையே இன்னமும் சினிமாவில் கால் ஊன்றி இருக்கிறார் என்றால் அவரின் தன்னம்பிக்கை ஆச்சரியப்பட வைப்பது தானே. இதை ஒருமுறை அஜித்தே கூறியும் இருக்கிறார்.

சஞ்சீவ்

விஜயின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் அஜித்தை சந்திக்க சென்று இருக்கிறார்கள். அவர்களை தனது கேரவனில் அமர வைத்து ஜூஸ் கொடுத்து உபசரித்தாராம் அஜித். அப்போது பேசிக்கொண்டிருக்கையில், எனக்கு வாழ்க்கையிலேயே பெரிய லட்சியம் என்றால் உங்க நண்பரை ஜெயிப்பது தான். அவரை தூக்கிப்போட்டுட்டு எப்படியாவது மேலே சென்று விடுவேன் என கூறி இருக்கிறார். விஜய் நண்பர்கள் என தெரிந்தும் தைரியமாக அவரிகளிடம் கூறியது சஞ்சீவிற்கு ஆச்சரியமாக இருந்ததாம். அதை விஜயிடம் கூறிய போது, விஜய் சிரித்துக்கொண்டே இதுக்கு தனியாக ஒரு கெத்து வேணுமுலடா எனக் கூறினாராம்.

Published by
Akhilan