
Cinema News
மருத்துவமனையில் அஜித்தின் நிலையைப் பாத்து என்னை மாத்திக்கிட்டேன்…! உணர்வு பூர்வமாக பேசிய ராதாரவி…
சினிமாவில் மாஸ் ஹீரோவாக தன்னை காட்டினாலும் நிஜ வாழ்க்கையில் இவர் செய்யும் உதவிகள் பல பேருக்கு தெரியாமலயே போய் விடுகிறது. இவரும் உதவி என்பது மனதார செய்வது. எல்லோருக்கும் தெரிந்து தான் செய்யவேண்டும் என கட்டாயம் இல்லை என்ற குறிக்கோளுடன் இருக்கிறாரோ என்னவோ?. அவர் தான் நம்ம அஜித்.
இவர் பட்ட கஷ்டங்கள் கூட இருந்தவர்களுக்கு பல பேருக்கு தெரியும். ஒரு நேர்காணலில் கூட அஜித் சொல்லியிருப்பார். நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்தால் என்னால் முடிந்தவரை இல்லாதவர்களுக்கு பல உதவிகளை செய்வேன் என்றி கூறியிருப்பார். இது கிட்டத்தட்ட இவர் நடிக்க வந்த புதிதில் சொல்லியிருப்பார். அவர் சொன்னதை இன்று வரை கடைப் பிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
இதையும் படிங்கள் : ஏன்டா ‘விக்ரம்’ இயக்க ஒத்துக்கிட்டோமோ.! கமல்ஹாசனால் நொந்து போன லோகேஷ் கனகராஜ்.!?
ஒரு சமயம் நடிகர் ராதாரவி பழங்கால நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கரின் கண் மருத்துவமனைக்கு சென்றிருந்தாராம். அவருக்கு கண் பரிசோதனைக்காக சென்றிருந்தாராம். அந்த சமயம் கண் லென்ஸ் வைக்க 60000 ரூபாய் வரை செலவாகுமாம். ராதாரவியை கொஞ்சம் காத்திருக்க சொல்லியிருக்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.
இவரும் காத்திருந்து பார்த்த போது திடீரென அஜித் வந்தாராம். விசாரித்ததில் கிட்டதட்ட 5000 பேருக்கு இந்த கண் லென்ஸ்க்கு ஆகிற செலவை அஜித்தே கொடுப்பதாக பொறுப்பேற்றிருந்தாராம். அதை கொடுக்க தான் வந்தாராம் அஜித். இந்த சம்பவத்தை பார்த்த பிறகு அஜித் மீது எல்லை இல்லா மரியாதை என்னை அறியாமலயே வந்தது. அதுவரை அஜித் அஜித் என்று தான் கூப்பிட்டு கொண்டு இருந்தேன். இந்த சம்பவத்திற்கு பிறகு இன்று வரை அவரை அஜித் சார்னு தான் அழைத்துக் கொண்டு இருக்கிறேன் என கூறினார்.