Connect with us
ajith_main_cine

Cinema News

அஜித் நடித்த சூப்பர் ஹிட் பாடல்…! உருவான விதம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியார் நடிக்கிறார்.

ajith1_cine

இதற்கிடையில் அவ்வப்போது பிரேக் எடுத்து பைக் ரைடு என்று கிளம்பி விடுகிறார் நடிகர் அஜித். நேற்று கூட இமயமலையில் ரைடில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியிருந்தது. தொடர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நடிகர் அஜித்திற்கு மறக்கமுடியாத படமாக அமைந்தது அமர்க்களம் படம் தான்.

இதையும் படிங்கள் : மேடையில் தனுஷை வச்சி செய்த சிம்பு.?! உண்மையில் நடந்தது என்ன.?! ரசிகர்களின் நெகிழ்ச்சி செயல்…

ajith2_cine

முழு ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்தது, அதன் மூலம் தான் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்தது என ராசியான படமாக அமைந்தது. அந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் செமஹிட். படமும் வெற்றி நடை போட்டது.குறிப்பாக சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற பாடல் இன்று வரை ரசிகர்களை பிரமிக்க வைக்கின்றது. வைரமுத்து வரிகளில் எஸ்.பி.பி, குரலில் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்.

ajith3_cine

இதையும் படிங்கள் : ஒரே ஒரு நகைச்சுவையால் கமலின் அகங்காரத்தை அடக்கிய நடிகர் நாகேஷ்…சூப்பர் ஹிட் காமெடி சீன்…

ஆனால் இந்த பாடல் அமர்க்களம் படத்திற்காக எழுதியது இல்லையாம். வைரமுத்துவின் கவிதை தொகுப்புகளில் படத்தின் இயக்குனர் சரண் படிக்கும் போது இது நல்லா இருக்கு. படத்திற்கு பயன்படுத்தலாம் என சொன்னதன் விளைவாக தான் படத்தில் சேர்த்திருக்கிறார்கள். மேலும் கவிதையில் கேட்டேன் என்பதற்கு பதிலாக வேண்டும் வேண்டும் என்று தான் இருந்ததாம். கதைக்கு ஏற்ற படி கேட்டேன் என மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இசையமைப்பாளர் பரத்வாஜ் 5 நிமிடத்தில் கம்போஸ் பண்ண பாடலாம் இது. மேலும் எஸ்.பி.பியும் மூச்சு விடாமல் 5 நிமிடத்தில் பாடி முடித்து விட பக்கத்தில் இருந்த இயக்குனர் சரண் எஸ்.பி.பி. காலில் அப்படியே விழுந்து விட்டாராம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top