சொன்னா நம்ப மாட்டீங்க...! அஜித் செய்த அந்த செயலால் சாப்பிட மறுத்த பிரபல இயக்குனர்.
அஜித் நடிப்பில் சுமார் 16 வருடங்கள் முன்பு பேரரசு இயக்கத்தில் உருவான திரைப்படம் திருப்பதி. இந்த படத்தில் நடிகை சதா நடித்திருப்பார். இந்த படத்திற்கு முன் விஜய் இயக்குனர் என பேர் பெற்றவர் பேரரசு. ஊர் பெயரை படத்தின் பெயராக வைத்து வெற்றிக்கண்டவர்.விஜய்க்காக திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர்.
ஆகவே அஜித் நம்மளோடு படம் பண்ணமாட்டார் என நினைத்துக்கொண்டிருந்தாராம் பேரரசு. ஆனால் திருப்பதி படத்திற்காக அவரே அழைத்தாராம். பேரரசு அவர்கள் படத்தின் பெயரை அஜித்திடம் சொன்னபொழுது ரொம்பவும் சந்தோஷப்பட்டாராம்.ஏனெனில் படப்பெயரை சொன்னபொழுது அஜித் திருப்பதியிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்.
படத்தை பற்றிய ஆலோசனை நடத்த அஜித் வீட்டிற்கு சென்றிருந்தார் பேரரசு. அப்பொழுது அஜித்தான் கதவை திறந்து உள்ளே அழைத்தாராம். டீ, காபி சாப்பிடுறீங்களா? என அஜித் கேட்க பேரரசு டீ விரும்பியாம். உடனே டீனு சொல்ல அஜித்தே போய் டீ போன போனாராம். பேரரசு சர் என்ன நீங்க டீ போடுறீங்க? என கேட்க வீட்ல யாரும் இல்ல, வேலையாட்களும் இல்ல என சொன்னாராம்.
உடனே பேரரசு சர் வேண்டாம் என சொன்னாராம். அஜித் இருக்கட்டும் என சொல்லி பேரரசுக்கும் அஜித்திற்கும் டீ போட்டு சேர்ந்து குடித்துள்ளனர். வீட்டிற்கு போகும் விருந்தாளிகளுக்கு விருந்தோம்பல் என்பது முக்கியம்.அது அஜித் அவர்களுக்கு ரொம்பவே இருக்கிறது என பேரரசு அவர்கள் தெரிவித்தார்.