ரத்தகாயங்களுடன் அஜித்... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படங்கள்.....

by சிவா |
ajith
X

நடிகர் அஜித் இதுவரை உடலில் 15 அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட ஒரு நடிகர் ஆவார். அதுவும் முதுகில் இவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், ரிஸ்க்கான சண்டை காட்சிகள், பைக் ஓட்டும் காட்சிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அதிலும் வலிமை படத்தில் ஆபத்தான பல பைக் சேஸிங் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தார் அஜித். வலிமை படப்பிடிப்பில் அஜித் பைக்கில் வீலிங் விடுவது போல ஒரு காட்சி வரும். இதை அஜித் செய்த போது கீழே விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் வலிமை மேக்கிங் வீடியோவிலும் இடம் பெற்றிருந்தது.

ajith

இந்நிலையில், இந்த காட்சிகளுக்கு பின் அவர் காயமடைந்த தன் உடலுக்கு சிகிச்சை பெறும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ajith

Next Story