அந்த படம் பார்த்துதான் என்னை நடிகராக ஏத்துக்கிட்டாங்க!.. ஃபீல் பண்ணி பேசும் ஏ.கே!...

by Rohini |   ( Updated:2025-05-02 05:38:02  )
ajith
X

ajith

Ajith: எங்கு பார்த்தாலும் அஜித்தை பற்றிய தகவல் தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. அதுவும் சோசியல் மீடியாக்கள் முழுவதுமாக அஜீத்தை பற்றிதான் கவர் செய்து வருகிறார்கள். அந்த அளவுக்கு ஆங்கிலம் ஊடகம் ஒன்றுக்கு அஜித் கொடுத்த பேட்டி மிகவும் வைரலாகி வருகின்றது. அந்த ஊடகத்தில் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் அஜித் .தன் வாழ்வில் பட்ட வேதனை போராட்டம் லட்சியம் சாதனை என அனைத்தையும் அந்த பேட்டியின் மூலம் தெரிவித்து இருக்கிறார்.

தனக்கு உறுதுணையாக நின்றவர்கள் இந்த சினிமாவிற்குள் எப்படி வந்தேன் என்பது பற்றியும் ஏராளமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் அஜித் .பத்மபூஷன் விருதை சமீபத்தில் பெற்ற அஜீத் உடனடியாக அங்கு உள்ள ஒரு ஆங்கிலம் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தார். அது சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. நடிகராகவும் நல்ல மனிதராகவும் இந்த தமிழ் திரை உலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித்.

மற்ற நடிகர்களைப் போல் சகஜமாக யாரிடமும் பேச மாட்டார். பழக மாட்டார் எனினும் ஒரு நிமிஷம் பார்த்தால் போதும் ஏழு ஜென்மத்திற்கு அந்த நபரை ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவரிடம் மெமரி பவர் இருக்கிறது .அதுதான் அவருடைய பிளஸ். ரசிகர்களுக்கு அவ்வப்போது அறிவுரைகளையும் கூறி வருகிறார். அந்த பேட்டியில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை பற்றியும் கூறியிருப்பார்.

அந்த படத்திற்கு முன்பு வரை சில படங்களில் நடித்ததினால் குற்ற உணர்ச்சியில் இருந்தேன். அதனால் நேர்கொண்ட பார்வை படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்தது என அந்த படத்தில் நடித்ததை பற்றி பேசுகிறார் அஜித். அதைப் போல என் வாழ்நாளில் மிகவும் நெருக்கமான படம் எது என்பதை பற்றியும் கூறி இருக்கிறார். அது வேறு எந்த படமும் இல்லை. வாலி திரைப்படம் .

இந்த படத்திற்கு பிறகு தான் மக்கள் தன்னை ஒரு சீரியஸ் நடிகனாக ஏற்றுக் கொண்டார்கள் எனக் கூறி இருக்கிறார். இந்த படத்திற்கு முன்பும் எனக்கு மக்களிடம் அன்பு கிடைத்தாலும் வாலி எனக்கு பல கதவுகளை திறந்து விட்டது. சில படங்களில் யார் நடித்தாலும் ஓடி இருக்கும் என்ற நிலை உண்டு .ஆனால் வாலி ,பில்லா, மங்காத்தா, வரலாறு போன்ற படங்கள் என் திறமையை காட்டுவதற்கான படங்களாக அமைந்தன என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் அஜித்.

Next Story