Ajith: இந்த ஒரு வீடியோ போதும் ! ஆக்டிங்.. ஸ்போர்ட்ஸ் தாண்டி நல்ல அப்பாவாகவும் ஜொலிக்கும் அஜித்

adhvik
Ajith: சினிமாவில் ஒரு பக்கம் கலக்கினாலும் விளையாட்டிலும் விடாமல் முயற்சி செய்து தன்னுடைய நீண்ட நாள் பேஷனை தற்போது தொடர்ந்து அதில் வெற்றியும் குவித்து வருகிறார் அஜித். சினிமாவில் நடிக்க வந்த போதே அவருக்கு ரேஸில் ஆர்வம் அதிகம். அப்பொழுதே ஏகப்பட்ட விபத்துகளில் சிக்கி நிறைய அறுவை சிகிச்சைகள் எல்லாம் செய்து அப்படியே தான் படங்களிலும் நடித்து வந்தார்.
இதனால் கூட சில நல்ல நல்ல படங்களின் வாய்ப்பு இவரை விட்டு போயிருக்கிறது. அதனால் இடையில் சின்னதாக பிரேக் எடுத்துக்கொண்ட அஜித் தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்தார். அவருடைய ஒரே குறிக்கோள் எப்படியாவது உலகத்தரம் வாய்ந்த ரேஸில் கலந்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான். அதை இப்போது நிகழ்த்தி வருகிறார்.
துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்து கொண்டு தன்னுடைய அணியை மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றி சென்றார். அதன் பிறகு இத்தாலியில் நடந்த ரேஸிலும் அவருடைய அணி மூன்றாவது இடம் பிடித்தது. இப்படி தொடர்ந்து கார் ரேஸில் தன்னுடைய லட்சியத்தை அடுத்தடுத்து அடைந்து வருகிறார் அஜித். இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் ஒரு நடிகராக விளையாட்டு வீரராக மாறி இருக்கிறார் அஜித்.
இந்த நிலையில் அவருடைய மகன் ஆத்விக்கும் தற்போது ரேஸில் குதித்து இருக்கிறார். சிறுவர்களுக்கான ஒரு ரேஸ். அதாவது கோ கார்ட் என்ற ஒரு சிறிய ஸ்போர்ட்ஸ் கார் ரேஸ் இருக்கிறது. அதில் இப்போதே தன்னுடைய மகனை ஈடுபடச் செய்து ட்ரைனிங் கொடுத்து வருகிறார் அஜித். ஏற்கனவே அவருடைய மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்.

அது சம்பந்தமான போட்டிகளிலும் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்றவர். இன்னொரு பக்கம் அவருடைய மனைவி ஷாலினி ஒரு பேட்மிட்டன் பிளேயர். இப்படி குடும்பமே விளையாட்டில் ஆர்வம் கொண்டு தங்களுடைய பேஷனை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இது பார்க்கும் ரசிகர்களுக்கும் ஒருவித உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது.அதிலும் குறிப்பாக தன்னுடைய மகனை அஜித் அக்கறையுடன் பராமரிக்கும் முறை பார்த்துக் கொள்ளும் விதம் என மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார் அஜித்.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/DH_LEuSJ1IW/?igsh=YWI4eHl2cTR5M241