விக்னேஷ் சிவனை தொடர்ந்து ஆதிக்கை டீலில் விட்ட அஜித்..! அடுத்த இயக்குனர் இவர்தானா?
Ajithkumar: அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை தொடர்ந்து அவரின் அடுத்த பட இயக்குனர் குறித்த முக்கிய தகவல்கள் கசிந்துள்ளது. இதிலும் ஒரு இயக்குனருக்கு பல்ப் கிடைத்து இருக்கிறது.
துணிவு படத்தினை முடித்துவிட்டு அஜித் அடுத்து நடிக்க இருந்த படத்தினை இயக்க இருந்தது விக்னேஷ் சிவன் தான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் பெருவாரியான கோலிவுட்டுக்கே கசிந்த தகவலாக இருந்தது. ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன ஒன்லைன் எதுவும் அஜித்தை கவரவில்லையாம்.
இதையும் படிங்க: வீட்டுக்கு போக ஆசைப்படும் ரவி.. முரண்டு பிடிக்கும் ஸ்ருதி.. அசிட் அடிக்க காத்திருக்கும் பிஜூ..!
இதனால் அவரை தூக்க லைகா நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறார். இதற்காக நயன் வந்து பேசியும் கூட அஜித் ஒப்புக்கொள்ளவில்லையாம். அதை தொடர்ந்து அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி அஜித்தின் விடாமுயற்சி படத்தினை இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அப்படி சுத்தி இப்படி சுத்தி சமீபத்தில் தான் தொடங்கியது. அதிலும் அஜித் ப்ரேக் எடுத்து கொண்டு சென்னை திரும்பி இருக்கிறார். தமிழ் புத்தாண்டுக்காகவது படத்தினை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவில் படக்குழு இயங்கி வருகிறது. ஆனால் அஜித்தின் ஷூட்டிங்கே தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஏங்க கோபி சார்..! நீங்க ரொம்ப உத்தமனு தான்… ஈஸ்வரிக்கு என்ன பைத்தியம் பிடிச்சிட்டு போல?
இப்படத்தினை முடித்து கொண்டு அஜித்தின் அடுத்த படத்தினை ஆதிக் ரவிசந்திரன் இயக்குவார் என்ற தகவல் கசிந்தது. ஆனால் தற்போது அவருக்கும் தலையில் துண்டு விழுந்து இருக்கிறது. அஜித், ஆதிக்கிற்கு நோ சொல்லி விட்டாராம்.
இதனால் அஜித்தின் 63வது படத்தினை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதுவும் இல்லாமல் பல வருட இடைவேளைக்கு பின்னர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.