வெளிநாட்டில் செட்டில் ஆக இருந்த நம்ம தல..! ராதிகாவின் முயற்சியால் மீண்டு வந்த அஜித்...என்ன மேட்டர்னு தெரியுமா..?
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய
படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்திலும் வைசாக்கிலும் நடந்து வருகிறது.
நடிகர் அஜித் ஒரு கார் ரேஸர், பைக் ரேஸர் என்று அனைவருக்கும் தெரியும். இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையிடையே கூட பைக்கை எடுத்து கொண்டு அவ்வப்போது ரைடு போய்க் கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு மஞ்சு வாரியாரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
இதையும் படிங்கள் : விக்ரம் 100வது நாள் வெற்றிவிழா…! அதைவிட எனக்கு முக்கியமான வேலை இருக்கு…! லோகேஷின் அசால்ட்டான பதில்….
இன்று இல்லை. அவர் ஆரம்பத்தில் இருந்தே ரேஸ் மீது அலாதி பிரியம் கொண்டவர். அதன் மூலம் நிறைய விபத்துக்களை எதிர்கொண்டுள்ளார். மேலும் ஒரு காலகட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்ற நிலையில் இருந்திருக்கிறார் நடிகர் அஜித். அதாவது ஒரு விபத்தில் சிக்கி கட்டு போட்டு இருந்திருக்கிறார். சரியானதும் தன் அண்ணன் கூடவே வெளிநாட்டில் செட்டில் ஆகனும் என்ற எண்ணத்தில் இருந்த அஜித்தை மறுபடியும் திரைக்கு தூக்கிட்டு வந்த படம் பவித்ரா.
அந்த படத்தில் பவித்ரா என்ற லீடு ரோலில் நடித்திருப்பவர் நடிகை ராதிகா. ஒரு கேன்சர் நோயாளியாக இளம் வயது பையன் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய படக்குழு அப்பொழுது தான் அமராவதி படத்தில் நடித்து முடித்து விபத்தில் சிக்கி ரெஸ்டில் இருந்த அஜித்தின் போட்டோவை காட்டி ராதிகாவிடம் கேட்டிருக்கின்றனர். அவரும் அஜித்தின் புகைப்படத்தை பார்த்து ம்ம். பார்க்க நல்லாத்தான் இருக்கான். இவனயே ஓகே பண்ணிடலாம் என சொல்லியிருக்கிறார். அஜித்தை சந்தித்த படக்குழு இந்த ஒரு படம் மட்டும் நடிச்சுக் கொடுங்க. ராதிகா அம்மாவும் பார்த்து ஓகே சொல்லிட்டாங்க என்று அஜித்தை சமாதானம் செய்து நடிக்க வைத்திருக்கின்றனர். அதையடுத்து வந்த படங்கள் தான் ஆசை , நேசம் போன்ற படங்கள்.