பிரச்சினையோடு வெளியான துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!...அப்போ அஜித் எங்க இருந்தாருனு தெரியுமா?..

by Rohini |
ajith_main_cine
X

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகி வரும் படம் துணிவு திரைப்படம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்க சமுத்திரக்கனி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ajith1_cine

மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் பாவ்னியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் ஆரம்பித்ததில் இருந்தே படப்பிடிப்பில் ஒரு தொய்வு இருந்து கொண்டே வந்தது. திடீரென நடிகர் அஜித் 10 நாள் விடுமுறை பயணமாக பைக் ரைடு சென்றது அந்த நேரத்தில் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

ajith2_cine

மேலும் அஜித்திற்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் பிரச்சினைகள் என்று வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. மேலும்சமீபத்தில் துணிவு படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு அந்த போஸ்டரை தயார் செய்யவும் பெரும்பாடுபட்டிருக்கிறது.

ajith3_cine

மாலையில் போஸ்டரை ரிலீஸ் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் படக்குழு இருக்க அதுவரை தயார் செய்யாமல் இருந்த குழுக்கள் அன்று காலை அஜித் தங்கியிருந்த வீட்டிற்கே சென்று அவருடைய ஷோஃபாவிலேயே வைத்து அவசர அவசரமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு அஜித்திற்கு விருப்பம் இல்லை என்ற கருத்தும் அரசல் புரசலாக வருகின்றது. அதனாலேயே படப்பிடிப்பும் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில் சில பேர்.

Next Story