Categories: Cinema News latest news

இதை பாக்காம யாரும் துணிவு பாக்க தியேட்டர் வராதீங்க… ஷாக்கிங் தகவல் சொன்ன இயக்குனர் ஹெச்.வினோத்

துணிவு படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் படத்தினை பார்க்க தியேட்டர் வரும்போது இதை பார்க்காம வர வேண்டாம் என ரசிகர்களிடம் வேண்டுக்கோள் விடுத்து இருக்கிறார்.

போனி கபூர் தமிழில் தயாரித்து வரும் படம் துணிவு. இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்க அஜித்குமார் நடித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். முக்கிய வேடத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளனர். தை பொங்கல் தினத்தில் படம் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

துணிவு

துணிவு படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருப்பதாகவும், அஜித் இதில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஒரு ரோல் நெகட்டிவ் ரோலாக இருக்கும் என ஏகப்பட்ட கற்பனைகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் வினோத் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வனால் எகிறிய ஜெயம் ரவி மார்க்கெட்… ஒரு விளம்பரத்துக்கு மட்டுமே இத்தனை கோடி சம்பளமாம்…

துணிவு படத்தின் கேரக்டரை பற்றி கேட்காதீர்கள். அது சஸ்பென்ஸாகவே இருக்கட்டும். வில்லனாக நடிக்கிறார் என்றால் மங்காத்தாவா என்று கேட்பீர்கள். இப்படி பல கற்பனைகள் உருவாகும். முதலில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் துணிவு படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை பார்த்து விட்டு வாங்க. இந்த படத்திற்கு வங்கி செட் தேவைப்பட்டது. அதனால் அதை போட்டோம். வங்கி கொள்ளையா என்று கேட்டால் அதற்கு இப்போது என்னிடம் பதில் இல்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Published by
Akhilan