“எவன்டா அவன் பீஸ்ட் 2.0ன்னு சொன்னது??”… மரண மாஸ் ஏகேவின் அதிரடி ஆட்டம்… துணிவு டிவிட்டர் விமர்சனம்…

Published on: January 11, 2023
Thunivu
---Advertisement---

விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது. ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இத்திரைப்படங்களை கண்டு ரசித்து வருவதால் திரையரங்குகள் திருவிழா போல் காட்சி தருகிறது.

Thunivu
Thunivu

வழக்கம்போல் ஆங்காங்கே விஜய்-அஜித் ரசிகர்களிடையே சண்டை சச்சரவுகளும் அரங்கேறி வருகின்றன. இதில் “துணிவு” திரைப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை பார்த்த பல ரசிகர்களும் மிகவும் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது “துணிவு” திரைப்படத்தை குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.

ஒருவர் “மங்காத்தாவுக்கு பிறகு ஒரு செம மாஸ் ஆன அஜித்தை பார்க்கலாம். டிரெண்டுக்கேத்த வசனங்கள், கடுப்படிக்காத காமெடிகள், அதிரடியான சண்டை காட்சிகள் என ஹெச்.வினோத் அமர்க்களப்படுத்தியுள்ளார். பொங்கலுக்கு கொண்டாட்டமான படம்” என கூறியுள்ளார்.

Thunivu
Thunivu

மற்றொருவர் “அஜித்குமார் பேசும் வசனங்களும், சண்டை காட்சிகளும் மிக அருமையாக இருக்கின்றன. டிக்கெட் விலையை விட அதிக வொர்த்தான படம்” என கூறியுள்ளார்.

Thunivu
Thunivu

இன்னொருவர் “எவன்டா அது பீஸ்ட் 2.0, மணி ஹீஸ்ட்ன்னு சொன்னது. ஏகே தரமான பதிலடி கொடுத்திருக்கிறார்” என கூறியுள்ளார்.

Thunivu
Thunivu

ஒருவர் “இது ஒரு அதிரடியான பேங்க் கொள்ளை திரைப்படம். ரசிகர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏகேவின் தரமான பேக்கேஜ்” என கூறியுள்ளார்.

Thunivu
Thunivu

மற்றொருவர் “அஜித்தின் ஸ்கிரீன் ஸ்பேஸும் ஸ்டைலும் நன்றாக இருக்கிறது. ஆனால் அதை தாண்டி பார்த்தால் ஹெச்.வினோத் நம்மை ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்” என்று கூறியுள்ளார்.

Thunivu
Thunivu