விஜே சித்துவுக்கு ஆப்பு வைக்க ரெடியா இருக்கும் விஜய் ஃபேன்ஸ்!.. இப்பவே உஷார் ஆயிட்டாங்களே!….

இப்போதெல்லாம் டிவிட்டர், இன்ஸ்டாகிரம், யுடியூப் போன்ற சமூகவலைத்தளங்கள் மூலமாகவே பலரும் பிரபலமாகி விடுகிறார்கள். அப்படி பிரபலமாகும் பலரும் சினிமா துறைக்கு வந்துவிடுகிறார்கள். அப்படித்தான் ஜிபி முத்துவெல்லாம் சினிமாவுக்கு வந்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
விஜே சித்து என்கிற பெயரில் யுடியூபில் சேனல் துவங்கி நண்பர்களுடன் ஜாலியாக லூட்டி அடிக்கும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் சித்து. இதன் மூலம் இவருக்கு லட்சக்கணக்கில் ஃபாலோயர்ஸும் உருவாகினார்கள். முதலில் பிளாக்ஷிப் என்கிற யுடியூப் சேனலில் பணிபுரிந்து வந்தார். அதன்பின் அதிலிருந்து பிரிந்து தனக்கென ஒரு யுடியூப் சேனலை உருவாக்கினார்.
சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். இதில், டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனின் கல்லூரி நண்பனாக நிறைய காட்சிகளில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. எனவே, நாமே ஹீரோவாக நடித்தால் என்ன என்கிற ஆசை சித்துவுக்கு வந்துவிட்டது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அந்த படத்தை அவரே இயக்குகிறார்.

தனக்கு ஏற்றார் போல ஒரு கதை எழுதிவிட்டார். இந்த படத்தை மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட சில படங்களை தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சமீபத்தில் இப்படம் தொடர்பான போட்டோஷூட் வேலைகளும் நடந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. மேலும், இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில்தான் இப்படம் பற்றிய ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அமர்க்களம் என்கிற தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இது சரண் இயக்கத்தில் அஜித் நடித்து 1999ம் வருடம் வெளியான திரைப்படம்.
ஆனால், இந்த படத்தின் தலைப்பை வைத்தால் விஜய் ரசிகர்கள் படத்தை ஓட்ட துவங்கிவிடுவார்கள். விஜய் ரசிகர்கள் கொட்டும் வன்மத்தில் படம் ஓடாமல் போய்விட்டால் என்ன செய்வது என அலார்ட் ஆன சித்து இப்போது வேறு தலைப்பை தேடி வருகிறாராம்.