அந்த ஒருவருக்காக தன் எல்லா வலிகளையும் தாங்கிக் கொண்ட அஜித்...! வெளியான ருசிகரமான தகவல்..
சினிமா உலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி , கமல் என இரண்டு தலைமுறைகளாக பார்க்கும் விதத்தில் தற்போது விஜய் அஜித் என இந்த தலைமுறையும் பரபரப்பாக பேசிக்கொன்டிருக்கும் இரு ஸ்டார்கள். இருவரும் அவரவர் வழிகளில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகின்றனர்.
அதில் விஜய் அவர்கள் அவரின் அப்பா சிபாரிசில் சினிமாவிற்குள் நுழைந்தவர் என யாவரும் அறிந்த ஒன்று. ஆனால் அஜித் அவர்கள் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு சினிமா இன்டஸ்டிரிக்குள் வந்தவர்.அவர் பார்க்காத கஷ்டங்களே இல்லை. புதுமுகம் என்பதால் ஆரம்பத்தில் ரொம்ப சிலரால் ஒதுக்கப்பட்டார்.
இப்படி படிப்படியாக வளர்ந்து ஒட்டுமொத்த சினிமா உலகையும் தன்பக்கம் ஈர்த்து வைத்துக்கொண்டுள்ளார் அஜித். சினிமாவையும் தாண்டி ரேஸில் ஆர்வம் உள்ள இவர் சில் போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய காயங்களுடன் அதையும் பொருட்படுத்தாமல் சர்ஜரி செய்துகொண்டு படங்களில் நடித்தும் வருகிறார்.
கீரிடம் படத்தில் சூட்டிங் தவிர்த்து பிற நேரங்களில் உட்காரவே மாட்டாராம். காரணம் கேட்டால் அந்த் அளவுக்கு வலி இருந்ததனால் தான் உடன் நடித்தவர்கள் கூறினர். வலியோடு நடிக்க வேண்டாம் , புரொடியூசரிடம் சொல்லி ரெஸ்ட் எடுங்கள் என கூறியதற்கு அஜித் அவர்கள் புரொடியூசர் எப்பேற்பட்ட மனிதர் கூட இருந்து பாத்தால் இரண்டு நாள் கூட லீவ் கொடுத்து விடுவார் ஆனால் அவருக்கு என்னால் இடைஞ்சல் வேண்டாம் என வலியையும் பொருட்படுத்தாமல் அந்த படத்தில் நடித்து கொடுத்தாராம் நடிகர் அஜித்.