ஸ்டைலீஸ் லுக்கில் அஜித்.. அஜர்பைசான்லயும் விடாத ரசிகர்கள்!.. தாறுமாறா வைரலாகும் புகைப்படங்கள்!..

Ajithkumar: அஜித்துக்கு தமிழர்கள் எங்கெல்லாம் வசிப்பார்களோ அங்கெல்லாம் ரசிகர்கள் இருக்கிறார்கள் போல. அவர் பைக்கை எடுத்துகொண்டு உலகில் எங்கு போனாலும் இவரை பார்க்கவும், அவருடன் பேசவும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காகவும் சிலர் காத்திருக்கிறார்கள்.
இப்போது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைசான் நாட்டில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்படத்திற்காக அஜித் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் பல கிலோ குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். இந்த லுக்கில் பார்ப்பதற்கே அஜித் அழகாக இருக்கிறார். அஜர்பைசான் நாட்டில் இப்போது படக்குழு இருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜாலியாக அந்த ஊரை சுற்றி வருகிறார் அஜித்.
அப்போது அஜர்பைசான் நாட்டை சேர்ந்த சிலரும் ‘நீங்கள் தமிழ் நடிகர் அஜித்தானே’ என ஆச்சர்யம் கொடுக்கிறார்களாம். அப்படித்தான் சமீபத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிருந்த அஜித்தை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்கள். ‘என்னை தெரியுமா?’ என அஜித் அவர்களிடம் கேட்க ‘நீங்கள் நடித்த சில தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன்’ என சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடன் அஜித் புகைப்படமும் எடுத்துகொண்டார்.
விடாமுயற்சி படத்திற்கு பிப்ரவரி மாதம் இறுதிவரை கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜித். எனவே, அப்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, எப்ரல் 14 அல்லது அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இப்படம் வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அஜர்பைசானில் ரசிகர்கள் சிலருடன் அஜித் எடுத்துகொண்ட சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.