பார்க்க கண்கொள்ளா காட்சியா இருக்கே! அனிருத் வீட்டில் குவிந்த அஜித் ஃபேமிலி

Published on: October 30, 2023
ani
---Advertisement---

Ajith Family :தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் அஜித். இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் ரெஜினா ஜோடியாக நடிக்கிறார்கள்.

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளி நாடுகளிலேயே படமாக்கப்படுகிறது. முழு மூச்சாக இரண்டு மாதங்களுக்கு படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறார்கள். அதனால் இங்கு குடும்பத்தை அவர் மனைவியான ஷாலினி பார்த்துக் கொள்கிறார்.

இதையும் படிங்க: ஏப்பா லவ் பண்ணத்தான் அங்க போனீங்களா?!. எல்லை மீறிப்போகும் பிக்பாஸ் லீலைகள் – வைரலாகும் புகைப்படம்

ஆரம்பத்தில் இருந்தே அஜித்துக்கு ஒரு ஃபுல் சப்போர்ட்டாக ஷாலினி இருந்து வருகிறார். பிள்ளைகளின் கல்வியில் இருந்து அவர்கள் சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி வரை எல்லாவற்றிலும் ஷாலினியே கவனித்து வருகிறார்.

ani1
ani1

இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் ஆயுத பூஜைக்காக கொழு வைத்து பூஜை செய்து தரிசனம் செய்தனர்.இதற்காக திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. அதில் அஜித் வீட்டிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: உன் உதடு இருக்கே அவ்வளவோ அழகு.. ஆயிஷாவிடம் அத்துமீறும் நிக்சன்..! அடேய் இது தமிழ் பிக்பாஸுடா..!

அதை மிகவும் பணிவாக ஏற்று ஷாலினி, அஜித்தின் மகள் மற்றும் மகன் ஆகியோர் கலந்து  கொண்டனர். அது சம்பந்தமான புகைப்படம் தான் இப்போது இணையத்தில் வைரலாகிவருகின்றது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.