மிகுந்த மன உளைச்சலில் அஜித்.. இது யாரு வீட்டுலயும் நடக்கக் கூடாது!.. மூத்த பத்திரிக்கையாளர் பேட்டி..

Published on: March 25, 2023
ajith
---Advertisement---

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். நேற்று இவரது வீட்டில் துக்ககரமான செய்தி நடந்து அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உடல் நலக் குறைவால் காலமானார். அந்த சமயம் அஜித் வெளி நாட்டில் இருக்க செய்தி அறிந்து காலையிலேயே வந்து இறங்கி விட்டார். இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தனன் அஜித்தின் தந்தை மரணத்தைப் பற்றியும் அஜித் இப்போது இருக்கும் மன நிலையை பற்றியும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ajith1
ajith1

அதாவது அஜித் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் கதறி அழக் கூட இந்த மீடியாக்கள் விடவில்லை என்றும் கூறினார். நேற்று அதிகாலையிலேயே அவரது தந்தை இறந்து விட்டாராம். இப்போதே செய்தி தெரிய வந்தால் ஊடகங்கள் ஒன்று கூடி பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிடும் என்பதற்காக பொறுமையாக காலை 9.30 மணியளவில் மீடியாக்களிடம் சொல்லியிருக்கின்றனர்.

சொல்லும் போதே 10 மணியளவில் உடல் தகனம் செய்யப்படும் என்பதையும் கூறியிருக்கின்றனர். ஊடகத்தில் தெரியப்படுத்தி அடுத்த நிமிஷமே அஜித்திடம் இருந்து ஒரு அறிக்கை அவரது மேனேஜர் மூலமாக வந்தது. அதாவது இந்த நிகழ்வை எங்களது தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக இருக்க ஆசைப்படுகிறோம், யாராவது இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்றால் ஒரு மெயில் ஐடியையும் கொடுத்து அந்த முகவரிக்கு அனுப்புங்கள் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

ajith2
ajith2

ஆனால் அவர் சொன்னதையும் மீறி ஊடகங்கள் ஒன்று கூடி மயானம் வரை சென்று முகத்திற்கு அருகில் புகைப்படம் எடுப்பது, அவரது தந்தை உடலை அருகில் போய் புகைப்படம் எடுப்பது என மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக அந்தனன் கூறினார். ஏற்கெனவே பத்திரிக்கையாளர்களிடம் இருந்து விலகி இருக்கும் அஜித் நேற்று ஊடகங்கள் நடந்து கொண்டதை பார்த்து மீண்டும் மிகுந்த மன உளைச்சலில் தான் இருப்பார் என்றும் கூறினார்.

மேலும் யாரும் வர வேண்டாம் என்று தெரிந்தும் நேற்று அவரது வீட்டிற்கு போனவர்கள் எல்லாம் தேவையில்லாத கூட்டம் என்றும் அந்தனன் கூறினார். அதுமட்டுமில்லாமல் அவரது வீட்டில் பணிபுரிந்த வேலையாட்களை கூட அனுமதிக்காததற்கு காரணம் அவர்களுக்கு என்று ஒரு சடங்கு, சம்பிரதாயம் என்று இருக்கும். அதை தனிப்பட்ட முறையில் உறவினர்கள் மட்டும் சூழ செய்ய வேண்டும் என நினைத்திருப்பார்.

ajith3
ajith3

ஒரு வேளை வேலையாள்களை அனுமதித்து அவர்கள் வெளியே வரும் போது ஊடகங்கள் உள்ளே என்ன நடந்தது என நோண்டி துருவி கேட்டு அதை செய்தியாக்கி விடுவார்கள் என்ற காரணத்தினால் கூட அவர்களை அனுமதிக்காமல் இருந்திருக்கலாம், ஊடகங்கள் நேற்று செய்த காரியம் வேறு எந்த வீட்டிலயும் நடக்கக் கூடாது என்றும் அந்தனன் கூறினார்.

இதையும் படிங்க :அஜித்தோட அப்பா ஒரு ஜாலி பேர்வழி!.. ரகசியங்களை பகிர்ந்த பயில்வான் ரங்கநாதன்!…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.