எல்லாத்தையும் சொன்னவர் என் சாவுக்கும் அஜித் வரமாட்டார்னு சொல்லலியே குமாரு!.. மனோபாலா மறைவால் ட்ரோலில் சிக்கிய அஜித்..
இன்று தமிழ் சினிமா ஒரு பெரிய இழப்பை சந்தித்து இருக்கிறது. நடிகரும் இயக்குனருமான மனோபாலா இன்று நம்மை விட்டு பிரிந்தார். இந்த செய்தி திரையுலகை சார்ந்த அனைத்து பிரபலங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த மனோபாலா இன்று திடீரென இவ்வுலகை விட்டு நீந்தார். அவருடைய மறைவை பற்றி பேசிய மனோபாலாவின் மகன் நிருபர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார் . அப்போது கூட "இந்த வருட தொடக்கத்தில் இருந்தே அப்பாவின் உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்து வந்தது . மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்துக் கொண்டுதான் வந்தோம். ஆனால் இன்று அவருடைய இந்த திடீர் மரணம் எங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் இவருடைய மறைவையும் அஜித்தையும் பற்றி சில செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன. அதாவது எந்த ஒரு பேட்டினாலும் மனோபாலா அஜித்தை பற்றி பேசாமல் இருக்க மாட்டாராம். அஜித்தின் நெருங்கிய நண்பராகவும் இருந்து உள்ளாராம் மனோபாலா. அஜித் மிகவும் நல்லவர். பக்கா ஜென்டில்மேன் .படப்பிடிப்பில் கூட கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரிடமும் சமமாக பழகக் கூடியவர் . லைட் மேன் டெக்னீசியன் என அனைவரையும் சகோதரர்களாக பாவிக்க கூடியவர் . அவர் முதலில் படப்பிடிப்பிற்கு வந்ததும் அனைவரிடமும் எல்லோரும் சாப்பிட்டீர்களா என்று தான் கேட்பாராம் .
சாப்பிடவில்லை என்றால் முதலில் சாப்பிட்டு வரச் சொல்லி அதன் பின் படப்பிடிப்பை ஆரம்பிக்க சொல்வாராம். இதையெல்லாம் மனோபாலா ஒரு பேட்டியில் அஜித்தை பற்றி கூறியிருக்கிறார். அதனால் மனோபாலாவின் மறைவு அஜித்திற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஒரு வேளை அவர் ஊரில் இருந்தால் கண்டிப்பாக மனோபாலாவிற்கு நேரில் வந்து இரங்கலை தெரிவிப்பார் என்றும் அந்த வீடியோவின் கூறப்பட்டது.
இதனிடையே இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை கமெண்டுகள் மூலமாக தெரிவித்து வருகின்றனர். அனைத்தையும் சொன்ன மனோபாலா என் சாவுக்கும் அஜித் வர மாட்டாரு என்று சொல்லி இருக்கலாமே என்று ரசிகர்கள் அஜித்தை பற்றி ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே எஸ் எஸ் சக்கரவர்த்தியின் மறைவிற்கு அஜித் தரப்பிலிருந்து எந்த ஒரு இரங்கல் செய்தியும் வராத நிலையில் இன்று மனோபாலாவின் மறைவிற்காவது அஜித் தரப்பிலிருந்து கண்டிப்பாக ஒரு இரங்கல் செய்தி வந்தால் நல்லது என அஜித் ரசிகர்கள் உள்பட அனைவரும் இணையத்தில் தங்கள் கமெண்ட்களை கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க : அஜித்துக்கு கொடுத்த வாக்கை மீறிய ஷாலினி..! நடிகர் பிரசாந்தும் அந்த இயக்குனரும்தான் காரணமாம்…