நான் ஊர் ஊரா போறேனா? என்னை பாத்து இப்படி சொல்லிட்டீங்களே… மனமுடைந்த அஜித்..
Ajithkumar: கோலிவுட்டில் நேற்றுலிருந்து விடாமுயற்சி படப்பிடிப்பின் காட்சிகள் தான் பெரிய அளவில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சியை திடீரென வெளியிட்டதற்கு பின்னால் அஜித்தின் ஒரு மனக்குமுறலை காரணம் என பிரபல விமர்சகர் பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பேட்டியில் இருந்து. விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பாதி முடிந்த நிலையில் அஜித் தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். இதை தொடர்ந்து அவர் விடாமுயற்சியை கைவிட்டு விட்டார் என்ற பேச்சுகள் இணையத்தில் வைரல் ஆகியது.
இதையும் படிங்க: மங்காத்தா ஹிட்டை ட்ரீட் வைத்து கொண்டாடிய விஜய்!.. என்னப்பா சொல்றீங்க!..
அதே நேரத்தில் சன் ரைசஸ் அணியின் பந்துவீச்சாளர் நடராஜை சந்தித்து அவர் பிறந்த நாளை கொண்டாடியதோ நெகட்டிவாக அஜித்தின் மீது வன்மத்தை கக்கும் விஷயமாக மாறிவிட்டது. இதனால் அஜித் தரப் பெரிய மனக் குமறலில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் வெளிப்பாடாக தான் விடாமுயற்சியின் அந்த குறிப்பிட்ட காட்சி ரிலீஸ் செய்யப்பட்டதாம்.
அஜித் வேகமாக வண்டி ஓட்டி சென்று திடீரென ஏற்பட்ட தடங்களில் 20 அடி பள்ளத்தில் கார் தடம் புரண்டது. அது ஹாமர் கார் என்பதால் அஜித்துக்கும் அவருடன் இருந்த ஆரவிற்க்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இதுவே வேறொரு காராக இருந்தால் அஜித்தின் உயிருக்கே பெரிய ஆபத்தாகி இருக்கும்.
இதையும் படிங்க: ஆத்தி எல்லாமே குலுங்குதே!.. ஆரஞ்சு புடவையில் அட்டகாசமான ஆட்டம்!.. கிச்சா பொண்டாட்டி செம டான்ஸ்!..
இப்படி கடின உழைப்பை போட்டு நடித்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தின் மீது தனக்கு ஆர்வம் இல்லை என ரசிகர்கள் தெரிவிப்பது அஜித்துக்கு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். இது ஒரு புறம் இருக்க, ஏற்கனவே மங்காத்தா திரைப்படத்தில் அஜித் பைக் விபத்து குறித்து ஒரு காட்சியை ரிலீஸ் செய்திருந்தனர். இப்படி தொடர்ந்து அஜித்தின் விபத்து குறித்த வீடியோக்களை வெளியிட்டால் அது அவரின் இமேஜை பெரிய அளவில் பாதிக்கும்.
கேரியர் முக்கியம்தான். அதே அளவில் உயிரின் மீதும் கவனம் இருப்பது ரொம்ப முக்கியமான விஷயம். அஜித் போன்ற ஒரு பெரிய முன்னணி நடிகருக்கு சின்ன விபத்து ஏற்பட்டால் கூட அது ரசிகர்களை பெரிய அளவில் பாதிக்கும். இதை அஜித் இனிமேல் கருத்தில் கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வது அவருக்கும் சரி ரசிகர்களுக்கும் சரி பெரிய ஆதரவாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.