வாலி படத்தால அஜித்துக்கு வந்த சோதனை!..இப்ப வரை விடாமல் தொடரும் சோகம்!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் நடிகர் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் இணைய இருக்கிறார்.
மாஸான நடிகராக வலம் வரும் அஜித்தை ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அவரை ஒரு தடவையேனும் சந்தித்து விட மாட்டோமா என ஏங்கி வரும் நிலையில் ஒரு பிரபல நடிகர் ஒரு தடவையாவது அஜித்துடன் நடிக்க வேண்டும் என ஏங்கிக் கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க : சுஹாசினி ஹீரோயினான கதை தெரியுமா… நெஞ்சத்தைக் கிள்ளாதே ரகசியம்!
அவர் வேறு யாருமில்லை. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். 80களில் பல முன்னனி நடிகர்களுடன் மிக நெருக்கமான நண்பராகவும் சக நடிகராகவும் இருந்தவர். பல நாடகங்களை அரங்கேற்றியவர். இப்படி பட்டவர் அஜித்துடன் நடிக்க ஏங்கிக் கொண்டு இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
காரணம் அஜித் நடித்த வாலி படம் தானாம். அந்த படத்தை பார்த்து அஜித்தின் நடிப்பில் மெய்சிலிர்த்துவிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் அஜித்திடமே நிறைய தடவை கேட்டிருக்கிறேன். நானும் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். எப்பொழுது தான் உன்னுடன் நடிக்க என்னை கூப்ட போறேனு அஜித்திடமே கேட்டிருக்கிறேன் என்று மகேந்திரன் கூறினார்.