புதிய சாதனை படைத்த தல அஜித்தின் வலிமை Glimpses வீடியோ.. செம மாஸ்!!

by adminram |
valimai
X

நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் ஹீரோவாக நடித்து வரும் படம் 'வலிமை'. இதில் அஜித்துக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்த ஹீமா குரோஷி நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூரும் சிறிய வேடத்தில் நடித்துள்ளாராம்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இப்படத்தின் அப்டேட் ஏதும் இல்லாமல் சென்ற இடத்திலெல்லாம் கொடிபிடிக்க தொடங்கினர் அஜித் ரசிகர்கள். இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என அஜித்தே அறிக்கை விடும் அளவிற்கு மோசமாக நடந்துகொண்டார்கள் ரசிகர்கள்.

அதன்பின் கடந்த சில நாட்களாக இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. முதலில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் பிச்சர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ajith12-2

Valimai

இதைத்தொடர்ந்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென இப்படத்தின் 'நாங்க வேறமாரி' என்ற பாடலை வெளியிட்டது படக்குழு. இப்பாடலும் சூப்பர் ஹிட்டாகி இணையத்தில் வைரலானது. அத்துடன் அதிகமான பார்வைகளை பெற்ற பாடல்களின் வரிசையிலும் இணைந்தது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் Glimpses விடியோவை படக்குழு வெளியிட்டது. செம மாஸாக & ஸ்டைலாக வெளியான இந்த வீடியோ அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேநேரத்தில் இந்த வீடியோ பார்ப்பதற்கு விவேகம் மாதிரியே உள்ளது என்ற விமர்சனத்தையும் பெற்றது.

இந்நிலையில் இந்த வீடியோ 24 மணி நேரத்தில் 728K லைக்ஸ்களை பெற்று இந்திய அளவில் அதிக லைக்ஸ்களை பெற்ற Glimpses வீடியோ என்ற சாதனையைப் படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளியான 38 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

Next Story