ஏன்யா இப்டி பண்றீங்க.?! வலிமை தயாரிப்பாளரை வருத்தப்பட வைத்த நெட்டிசன்கள்.!

by Manikandan |
ஏன்யா இப்டி பண்றீங்க.?! வலிமை தயாரிப்பாளரை வருத்தப்பட வைத்த நெட்டிசன்கள்.!
X

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் போனி கபூர். தொடர்ந்து அஜித் நடித்த, நடிக்க உள்ள மேலும் 2 படங்களை தயாரிக்க, தயாரித்து உள்ளார்.

அதில் ஒன்று வரும் வாரம் உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ள வலிமை திரைப்படம். இந்த படத்தையும் வினோத் இயக்கி உள்ளார். வினோத் - அஜித் - போனி கபூர் இணையும் படத்திற்கு தற்போதைக்கு AK61 என்று மட்டுமே அழைக்கப்பட்டு வேலைகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், அடுத்து போனி கபூர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளார். அதற்கான சந்திப்பு நிகழ்ந்துவிட்டது என பரவலாக பேசப்பட்டு, இணையத்தில் தலைவர்170 எனும் ஹேஸ்டேக் மூலம் பிரபலமாகி விட்டது.

இதையும் படியுங்களேன் - சாதனை மேல் சாதனை.! இதுவரை உலக சினிமாக்கள் செய்யாத சாதனை.! அஜித்தின் வலிமை-னா சும்மாவா?!

இந்த வதந்திகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என நினைத்த போனி கபூர், தனது டிவிட்டர் பக்கத்தில், ' நானும் ரஜினி சாரும் நீண்ட நாட்களாக நண்பர்கள். அவ்வப்போது நாங்கள் சந்தித்து கொள்வோம். ஐடியாக்களை பகிர்ந்து கொள்வோம். ஒருவேளை நான் ரஜினி படத்தை தயாரித்தால், அதனை முதலில் பகிரும் நபர் நானாக தான் இருப்பேன் ' என பதிவிட்டுள்ளார்.

இந்த டிவீட் மூலம் இணையத்தில் உலவிய மொத்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ன்=போனி கபூர்.

Next Story