வலிமைக்கு முதலில் வைத்த தலைப்பு இதுவா.?! நல்ல வேலை அஜித் தப்பிச்சிட்டார்.! இங்க ரணகளமே வந்திருக்கும்.!
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார். வினோத் இயக்கத்தில் முன்னர் வெளியாகி இருந்த தீரன் படம் போல பக்கா வினோத் படமாக இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.
ஆம், இது முழுக்க முழுக்க அஜித் திரைப்படமாக ஆக்சன் காட்சிகள், மாஸ் இன்ட்ரோ பாடல், பன்ச் வசனம் என அஜித்தின் வழக்கமான மாஸ் மசாலா திரைப்படமாக இத்திரைப்படம் வெளியானது. அதனால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர் என்றே கூறலாம்.
இறுதியாக வெளியான அஜித் திரைப்படங்களுக்கு நேர்கொண்ட பார்வை தவிர அனைத்தும் V-யில் ஆரம்பமாகும் தலைப்புகளாகவே இருக்கிறது. V எனும் தொடங்கும் தலைப்பை வைக்குமாறு அஜித் செண்டிமெண்ட் பார்ப்பதால் அப்படி தலைப்பு வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
முதலில் வலிமை படத்திற்கு வலிமை என தலைப்பு வைக்கவில்லையாம். மாறாக சாத்தானின் குழந்தைகள் என்றே வைத்திருந்தனராம். இது தெரிந்து தான் என்னவோ அஜித் மீண்டும் V சென்டிமென்ட் தலைப்பாக வலிமை வைத்து தப்பித்துவிட்டார் போல.
இதையும் படியுங்களேன் - ஒரு நாள் நடித்துவிட்டு வேண்டாம் என உதறிய விஜய்.! வாய்ப்பை பயன்படுத்தி சூப்பர் ஹிட்டடித்த சூர்யா.!
தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நடிகர் திரைப்படம் வெளியாகிறது என்றால் அதில் என்ன பிழை செய்துள்ளனர் அதனை குறித்து பிரச்னை செய்து நாம் பேர் வெளியில் தெரியும் படி செய்துவிடலாம் என ஒரு கும்பல் இருந்து வருகிறது. அதிர்ஷ்டவசமாக வலிமை தலைப்பை தேர்வு செய்து அஜித் தப்பித்து கொண்டார் என்றே கூறலாம்.