வடபழனி முருகனுக்கும் அஜித்துக்கும் இப்படி ஒரு பந்தமா? அப்போ எல்லாம் அவன் செயலா?

by Rohini |   ( Updated:2025-04-25 04:25:59  )
ajith2
X

ajith2

Ajith: அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி பெரிய வசூலை பெற்றிருக்கிறது. இதைப் பற்றி பத்திரிகையாளர் செய்யாறு பாலு பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அஜித்தை வைத்து முதன் முதலில் படத்தை இயக்கியவர் அகத்தியன். அவர் தான் அஜித்தை இந்த தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் வான்மதி. வான்மதி படத்திற்கு முன்பு அகத்தியன் முழுமதி என்ற படத்தை இயக்கியிருந்தார் .அதன் பிறகு தான் வான்மதி படத்தை எடுத்தார். அந்த படத்தின் கதையை அஜித் முழுவதுமாக கேட்கவில்லையாம்.

ஏனெனில் அஜித்துக்கும் அடுத்தடுத்த படங்கள் தேவை என்ற ஒரு கட்டாயத்தில் இருந்ததனால் படம் கமர்சியல் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அஜித் கேட்கவில்லையாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் அஜித்தை எந்த ரேஞ்சுக்கு வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் தான் இது. வான்மதி படத்திற்கு அஜித்துக்கு ஒரு சம்பளம் பேசி அதற்கான அட்வான்ஸ் எங்கு கொடுத்தோம் என்பதை பற்றி அகத்தியன் ஒரு சமயம் கூறி இருந்தாராம். வடபழனி முருகன் கோயில் அருகில் சரவணபவன் ஹோட்டல் இருக்கிறது.

அந்த ஹோட்டலின் சந்தில் ஒரு பீடா கடை இருந்ததாம். அங்கு வைத்து தான் அஜித்துக்கு வான்மதி படத்திற்கான அட்வான்ஸ் தொகையே கொடுத்தாராம் அகத்தியன். ஒரு நடிகனுடைய வளர்ச்சி எவ்வளவு பெரிய வளர்ச்சி என்பது இதிலிருந்து நமக்கு தெரிகிறது. அஜித் மிகக் கடுமையான உழைப்பாளி. அதில் மாற்றுக் கருத்து என்பதே கிடையாது. இன்று உலக அளவில் அஜித் தெரிவதற்கு காரணம் அதுதான். எங்கேயோ ஒரு பீடா கடை வாசலில் அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்ட நடிகர் இன்று பல கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரு பக்கம் சினிமா ஒரு பக்கம் கார் ரேஸ் என படு பிசியாக இருக்கிறார்.

அப்போ அவருடைய படத்தின் வசூலை பற்றி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. படம் வெளியாகி 15 நாள் ஆனால் என்ன 20 நாள் ஆனால் என்ன. குறிப்பாக இந்த படம் உலக அளவில் 110 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஓவர்சீஸில் அஜித் படத்தின் வசூலையே அஜித் படம் முறியடித்து இருக்கிறது. 72 கோடி என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதையும் தாண்டி மலேசியாவில் இந்த படத்தை கொண்டாடி தீர்த்து விட்டார்கள்.

ஸ்ரீலங்காவில் இந்த படத்தின் வசூல் 14 கோடி என்று சொல்கிறார்கள். இது ஒரு பெரிய வசூல் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயம் படம் ரிலீஸ் ஆகி எங்கேயும் அந்த 4.30 காட்சி ஒளிபரப்பாகவில்லை. ஆனால் ஸ்ரீலங்காவில் 4:30 மணி காட்சி அனுமதி இருந்ததாம். அங்கு தமிழர்கள் எல்லாம் சென்று விமானத்தில் போய் படத்தை பார்த்திருக்கிறார்கள். இதுதான் அஜித்தின் பெரிய மாஸ் .குட் பேட் அக்லி படத்தின் வெற்றி இதன் ஒரே ஒரு காரணம் அஜித் மட்டும் தான் என செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

Next Story