
Cinema News
தல தீபாவளிதான்..! விடமாட்டாரு அஜித்…சத்ய சோதனையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ்…!
வலிமை படத்தை தொடர்ந்து போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை பற்றிய வேறெந்த தகவலும் இதுவரை வெளிவராத நிலையில் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து வருகின்றது என்ற தகவல் மட்டும் உறுதியாகியுள்ளது.
அவ்வப்பொழுது படப்பிடிப்பிற்கு செல்லும் அஜித்தின் புகைப்படங்கள் மட்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் முக்கால் வாசி முடிந்த நிலையில் தீபாவளி ரிலீஸாக இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாகும் என தகவல் வெளியாகியது. அதே சமயம் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் படமான சர்தார் படமும் தீபாவளி அன்று ரிலீஸாகிறது என்ற தகவல் வெளியாகியது.
அதே நேரத்தில் சர்தார் படத்தின் தியேட்டர் உரிமையை ரெட் ஜெயண்ட் தான் வாங்கியுள்ளது. ஏற்கெனவே போனிகபூரும் உதயநிதியும் நெருங்கிய நண்பர்கள். அஜித் படத்தின் தியேட்டர் உரிமையையும் ரெட் ஜெயண்ட் தான் வாங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.இரு படங்களும் தீபாவளி ரிலீஸ் என்றால் தியேட்டர்களை பிரிப்பதில் சிக்கல்கள் கண்டிப்பாக இருக்கும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அதே சமயம் உதயநிதிக்காக போனிகபூர் விட்டுக் கொடுத்தாலும் அஜித் விட மாட்டார். அவர் தீபாவளி என்பதில் உறுதியாக இருக்கிறார். அதை விட்டால் பொங்கல். பொங்கல் ரிலீஸ்காக தளபதி 66 படம் காத்திருக்கிறது. ஆகையால் ரெட் ஜெயண்ட் என்ன செய்ய போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.