அஜித்தை நம்பி இன்னும் பிரயோஜனம் இல்லை...! எச்.வினோத் எடுத்த திடீர் முடிவு...
தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஐதராபாத் மற்றும் புனேவில் நடப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ஒரு இரண்டு வார விடுப்புகள் எடுத்து அஜித் லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படப்பிடிப்பு சமயத்தில் இப்படி போவது சரியா என்ற விவாதங்கள் கூட இணையத்தில் உலாவியது.
இதையும் படிங்கள் : நள்ளிரவில் எம்.ஜி.ஆருடன் நெருக்கத்தில் இருந்த கட்டழகி….! பார்த்து பதறிய நண்பர்…
ஆனால் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன என படக்குழு தரப்பில் தெளிவுபடுத்தியது. இதற்கிடையில் படத்தின் ஹீரோயினையும் அழைத்துக்கொண்டு இமயமலை வரை பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால் படத்தின் இயக்குனர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஏதோ காரணத்தால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிற காரணத்தால் ஏற்கெனவே தான் எடுக்கும் அடுத்த படத்தை விஜய் சேதுபதி வைத்து எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். இந்த இடைப்பட்ட காலங்களில் அந்த படத்தின் மீது கவனம் செலுத்தலாம் என விஜய்சேதுபதியை நெருங்க அதற்கு நம்ம மக்கள் செல்வன் முதலில் அஜித் படத்தை முழுவதும் முடித்து விடுங்கள். அதன் பின் இந்த படத்தை தொடங்கலாம் என சொல்லியிருக்கிறாராம்.