முழுக்க முழுக்க இந்த நடிகரின் தாக்கம் தான்!.. அஜித்தின் வில்லன் கேரக்டருக்கு பின்னனியில் இருக்கும் சம்பவம்...
தமிழ் சினிமாவே ஆச்சரியப்படும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் அஜித்.ஏனெனில் சினிமாவை பொறுத்தவரைக்கும் முதல் நான்கு இடங்களில் இருக்கும் நடிகர்கள் ரஜினி, கமல்,அஜித், விஜய். இவர்களில் ரஜினியையும் அஜித்தையும் அவ்வப்போது ஒப்பிட்டு பேசும் சூழ்நிலை நிலவி வருகிறது.
ரஜினியோ விஜயோ இவர்கள் ரசிகர்களை அவ்வப்போது சந்திப்பது, ரசிகர்களுக்காக ஏதாவது பேசுவது என தன்னைச்சுற்றி எப்பொழுது ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்து இன்று இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். ஆனால் அஜித்தோ பொதுமேடையில் வந்து பேசுவதும் இல்லை, தனக்கான ரசிகர்களுக்காக மன்றங்களை அமைத்து ஏதாவது செய்தாரா என்றால் அதுவும் இல்லை, சமூகப்பிரச்சினைகளை பற்றி பேசிவரும் நடிகர்கள் மத்தியில் அதைப் பற்றியும் எதுவும் பேசினதும் இல்லை.
இதையும் படிங்க : காசுக்கு விலை போனாரா விஜய்?.. ‘வாரிசு’ படம் குறித்து சர்ச்சையை கிளப்பிய பத்திரிக்கையாளர்!..
அப்படி இருக்கையில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை தேடி போவது ஏன்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் நிலவி வருகிறது.மேலும் எந்த நடிகர் பட விழாவானாலும் கலை நிகழ்ச்சிகளானாலும் அஜித் என்ற பெயரை கேட்டாலே ரசிகர்களின் ஆரவாரத்திற்கு அளவே இருக்காது. அந்த அளவுக்கு ரசிகர்கள் அஜித்தை தன் கடவுளாகவே பார்க்கின்றனர்.
இந்த நிலையில் அஜித் கதாநாயகனாக நடித்து கொடுத்த முதல் வெற்றிப்படம் ‘ஆசை’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜிடம் சார் நான் ஜெயிச்சுருவேனா? ஜெயிச்சுருவேனா? என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பாராம் அஜித். அதற்கு பிரகாஷ்ராஜ் உனக்கென அழகா கலரா இருக்க, கண்டிப்பாக உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சொன்னாராம்.
மேலும் ஆசை படத்தை தியேட்டரில் பார்க்க போன அஜித் வெளியே வந்ததும் பிரகாஷ் ராஜிடம் சார் உங்களுக்கு தான் ரசிகர்கள் தான் அதிகமா கைதட்டுகிறார்கள், நீங்கள் தான் ஸ்கோர் பண்ணிருக்கீங்க என்று சொல்லிவிட்டு, உங்க வில்லன் கதாபாத்திரம் நல்லா இருக்கு, அதே மாதிரி எனக்கும் பண்ணவேண்டும் என்று ஆசை இருக்கிறது, கண்டிப்பாக பண்ணுவேன், i will do that என்று சொன்னாராம் அஜித். அந்த தாக்கம் தான் வாலி, மங்காத்தா இன்று வரை துணிவு ஆகிய படங்களில் பிரதிபலிப்பதாக சித்ரா லட்சுமணன் கூறினார்.