
Cinema News
எப்பா எங்கள காப்பாற்ற வந்த தெய்வமே! ‘விடாமுயற்சி’க்கு உயிர் கொடுத்த உத்தமன்
ஒரு வழியாக விடாமுயற்சிக்கு அடிச்சது லக். பல பிரச்சினைகளால் மாட்டிக் கொண்டிருந்த லைக்கா நிறுவனம் தற்போது ஒரு முடிவை எடுத்திருக்கிறது. வருமான வரித்துறையால் சிக்கிய லைக்கா நிறுவனத்தின் வங்கிப் பணத்தை முற்றிலுமாக முடக்கிப் போட்டிருந்தது. அதனால் அந்த நிறுவனத்தால் படங்களை தயாரிக்க முடியாமல் போனது.
அதில் அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் லால் சலாம் திரைப்படம் போன்ற படங்களுக்கு தேவையான பண உதவிகளை சரிவர செய்ய முடியாமல் போனது. இதில் சற்று கூடுதலாக படப்பிடிப்பே ஆரம்பிக்கப் படாமல் இருந்த அஜித்தின் விடாமுயற்சி அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

vida1
இதனால் அஜித் ஒரு கட்டத்தில் பணம் கிடைக்க வில்லையென்றால் வேறொரு தயாரிப்பாளரிடம் படத்தை கொண்டு செல்லலாம் என்ற முடிவில் இருந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் இப்போது புது திடீர் திருப்பமாக படத்திற்கு தேவையான பணத்தை மதுரை அன்புவிடம் இருந்து பெற்று படத்தை எடுக்க முடிவெடுத்திருக்கிறதாம் விடாமுயற்சி படக்குழு.
மேலும் ஏற்கெனவே மதுரை அன்புவிற்கும் அஜித்திற்கு ஆகாத நிலையில் இப்படி மதுரை அன்பு உதவி செய்வது தெரிந்தால் அஜித்தின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்றும் யோசிக்கிறார்கள். அதே நேரம் ஏற்கெனவே போனிகபூருக்கு மதுரை அன்புதான் பணம் கொடுத்து உதவினாராம். அதனால் அஜித் இந்த விஷயத்தில் தலையிட மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. எப்படியோ ஒரு வழியாக விடாமுயற்சிக்கு வழி பிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

vida2