என்னப்பா அப்டேட்னு விளையாடிக்கிட்டு இருக்கீங்க… விடாமுயற்சியை விட்டு தொலைங்கையா… காண்டான ரசிகர்கள்!
Ajithkumar: கோலிவுட்டே அல்லோலப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் எனக்கென்ன என்ற ரீதியில் தான் இருக்கிறார் நடிகர் அஜித் குமார். துணிவு படம் ரிலீஸாகி விட்ட நிலையில் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியானது. அதற்கு அடுத்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வரவில்லை.
துணிவும், வாரிசும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியது. அந்த படத்தினை தொடர்ந்து விஜய் லியோ படத்தில் நடித்து விட்டு அந்த படமும் இன்னும் சில தினங்களில் ரிலீஸுக்கும் தயாராகி விட்டது. விஜய் தன்னுடைய 68வது படத்தின் வேலைகளிலும் பிஸியாகி விட்டார்.
இதையும் படிங்க: அடுத்த ஆதி குணசேகரனுக்கு இவர்கிட்டதான் பேசுறாங்களாம்!.. அப்போ இனி சீரியல் தீயாய் இருக்குமே!.
ஆனால் அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்தின் பெயர் மட்டும் தான் வெளிவந்தது. இப்படத்தினை லைகா தயாரிக்க முதலில் இயக்க இருந்தது விக்னேஷ் சிவன் தான். ஆனால் அவர் சொன்ன கதையில் அஜித்துக்கு விருப்பம் இல்லையாம். உடனே அவர் தூக்கப்பட்டு அவருக்கு பதில் மகிழ் திருமேனி அஜித்தினை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட்டில் இருந்து தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது அதில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. கடைசியாக இந்த மாத இறுதியில் அபுதாபியில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தலைவர் யார்னு காட்டிட்டாரு! நான் யாருனு காட்டுறேன் – ரஹ்மானை மிஞ்சும் சந்தோஷ் நாராயணன்
இப்படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோ நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளிவரவில்லை. அஜித்தின் வருகை உறுதி செய்யப்பட்ட பிறகே இதனை அறிவிக்கும் முடிவில் படக்குழு இருப்பதாக தெரிகிறது.
இதில் இன்னொரு தகவலாக, மகிழ் திருமேனி சொன்ன கதைகளையும் அஜித் ஓகே செய்யவில்லையாம். அதற்கு பதிலாக கர்ட்ரஸ்ஸல் நடித்து 1997ம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் ஹாலிவுட் படத்தின் கதையை வைத்தே விடாமுயற்சி உருவாக இருக்கிறதாக கூறப்படுகிறது.